கபசுர குடிநீர் தன்மை குறித்த ஆய்வுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்புதல்

கபசுர குடிநீர் தன்மை குறித்த ஆய்வுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்புதல்

2 mins read
91858161-9fe8-40b3-be85-f8625324f39b
படம்: ஊடகம் -

சென்னை: கொரோனா கிருமித் தொற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட கபசுர குடிநீரின் தன்மை குறித்து ஆய்வு செய்ய இரு பெரும் மருத்துவ அமைப்புகள் முன் வந்து உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையும் தேசிய சித்த மருத்துவமனையும் கையெழுத்திட்டு உள்ளன. தமிழகத்தில் கிருமித் தொற்றுக்கு ஆங்கில மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் சித்த மருத்துவமும் மக்களிடம் அதிக கவனத்தை பெற்றது.

சென்னை உட்­பட தமி­ழ­கம் முழு­வ­தும் சிறப்பு மையங்­கள் ஏற்­ ப­டுத்­தப்­பட்டு கிருமித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சித்த மருந்­து­க­ளான கப­சு­ரக் குடி­நீர், நில­வேம்பு கசா­யம், மூலிகை தேநீர், தூது­வளை ரசம், கற்­பூ­ர­வல்லி ரசம், ஆடா­தொடை ரசம், மணத்­தக்­காளி ரசம், மூலி­கை ­உ­ண­வு­கள், நவ ­தா­னி­யங்­கள் போன்­ற­வற்றை தந்து சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது.

இதன் மூலம் ஆயி­ரக்­க­ணக் ­கா­னோர் தொற்­றில் இருந்து குண­ம­டைந்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் சென்னை தாம்­ப­ரம் சான­டோ­ரி­யத்­தில் உள்ள தேசிய சித்த மருத்­துவ நிறு­வ­னம் (மருத்துவமனை), கொரோனா தொற்றை குணப்­ப­டுத்­தும் கப­சு­ரக் குடி­நீர் தன்மை குறித்த ஆராய்ச்­சிக்­காக சத்­தீஸ்­கர் மாநி­லம் ராய்ப்­பூ­ரில் உள்ள எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­யு­டன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் செய்­துள்­ளது. இது பற்றி விளக்­கம் அளித்த தேசிய சித்த மருத்­து­வ­மனை இயக்கு­நரான மருத்­து­வர் ஆர். மீனா­கு­மாரி, ''கப­சு­ரக் குடி­நீர் உள்­ளிட்ட சித்த மருந்­து­கள் கொரோனா தொற்றை எப்­படி குணப்­ப­டுத்­து­கிறது. எவ்­வ­ளவு நாட்­களில் குணப்­ ப­டுத்­து­கிறது. கப­சு­ரக் குடி­நீ­ரால் உட­லுக்கு ஏற்­படும் நன்­மை­கள் ஆகியன குறித்து ஆய்வு செய்­யப்­ப­டும். ராய்ப்­பூர் எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­யில்­தான் அதி­க­மான கிரு­மித்­தொற்று நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது. அத­னால்­தான், ஆராய்ச்­சிக்­காக இந்த மருத்­து­வ­ ம­னை­யு­டன் ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டுள்­ளது," என்­றார்.