சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் ரஜினியை முந்திக்கொண்டு விஜய்யை அரசியலில் திணிக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக விஜய் நேற்று முன்தினம் தமது ரசிகர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னை அருகே பனையூரிலுள்ள விஜய் வீட்டில் நடந்த இச்சந்திப்பில் மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவது தொடர்பாக விஜய் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
மாவட்ட நற்பணி மன்றங்கள் தம்மை அரசியலில் தொடர்புப்படுத்தி சுவரொட்டிகள் ஒட்டுவதை விஜய் கண்டித்ததாகவும் சுவரொட்டிகளைத் தவிர்க்கு மாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள் என அறிவுறுத்திய விஜய், வழக்கம்போல் தேவையான உதவிகள் தம்மிடம் இருந்து வரும் என உறுதியளித்தாராம்.

