புதிய அட்டையில் தமிழ் மொழி இருந்த இடத்தில் இந்தி

புதிய அட்டையில் தமிழ் மொழி இருந்த இடத்தில் இந்தி

1 mins read
18095f39-0ba6-4ad5-841e-ef6a745efc80
மாதிரி படம்: ஊடகம் -

சென்னை: இந்­திய தனித்­துவ அடை­யா­ளத்­திற்­கான ஆணை­யம் (UIDAI) தற்­போது புதிய தோற்­றத்­தி­லான ஆதார் அட்­டை­களை அறி­மு­கம் செய்­துள்­ளது.

'பாலி­வி­னைல் குளோ­ரைட்' (பிவிசி) அட்­டையான இதனை ஏடி­எம் அட்டை­ போல எளி­தாக வைத்­தி­ருக்க முடி­யும்.

ஆனால் புதிய அட்­டை­யில் தமிழ் காணா­மல் போய்­விட்ட­ தாக புகார்­கள் எழுந்­துள்­ளன.

ஏற்­கெ­னவே வழங்­கப்­பட்ட ஆதார் அட்­டை­களில் எனது ஆதார் எனது அடை­யா­ளம் என்ற வாச­கம் தமி­ழில் இடம்­பெற்­றி­ருக்­கும்.

ஆனால் புதிய 'பிவிசி' ஆதார் அட்­டை­யில் அந்த வாச­கம் நீக்­கப்­பட்டு அந்த இடத்­தில் இந்தி வாச­கங்­கள் திணிக்­கப்­பட்டு உள்­ள­தாக

புகா­ரில் கூறப்­ப­டு­கிறது. தொழில் ­நுட்­பக் கோளாறா அல்­லது வேறு ஏதே­னும் பிரச்­சி­னையா என மொழி ஆர்­வ­லர்­கள் கேள்வி எழுப்பி வரு­கின்­ற­னர்.