வீதியில் உட்கார்ந்து விளையாடிய அமைச்சர்

வீதியில் உட்கார்ந்து விளையாடிய அமைச்சர்

1 mins read
23d502ac-8bd7-4027-9a71-1c47944f94c7
படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமி­ழக மீன்­வ­ளத்துறை அமைச்­சர் ஜெயக்­கு­மார் ராய­புரத்தில் நடை­பெற்ற நிகழ்ச்சிக்­காக சென்று­ கொண்டு இருந்­தார்.

அப்­போது தெரு­வோ­ரம் சிறு­வர்­கள் கேரம் விளை­யா­டிக் கொண்டு இருந்­த­னர்.

அத­னைக் கண்­ட­தும் உற்­சா­கம் அடைந்த ஜெயக்­கு­மார் வேட்­டியை வரிந்து கட்­டிக்­கொண்டு அவ­ரும் விளை­யாட உட்­கார்ந்­து­விட்­டார்.

அமைச்­ச­ரால் ஒரு காயை­யும் அடிக்க இய­ல­வில்லை.

ஐந்­தா­வது முயற்­சி­யில் அவர் அடித்த காய் விழுந்­தது.

அதனை அங்கு இருந்தவர்கள் கைதட்­டி கொண்­டா­டி­னர்.

விளை­யாட்டை முடித்­துக்கொண்ட ஜெயக்­கு­மார், "மனம் தள­ரக்­கூ­டாது; விடா­மு­யற்சி இருந்­தால் வெற்றி பெற­லாம்," என சிறு­வர்­க­ளி­டம் சொல்­லிவிட்டு நகர்ந்­தார்.