கொரோனா தடுப்பூசி சோதனை: 65 பேருக்கும் ஆபத்து இல்லை

கொரோனா தடுப்பூசி சோதனை: 65 பேருக்கும் ஆபத்து இல்லை

1 mins read
6fe22227-f483-4a08-bb38-cbd5dff60a61
படம்: ஊடகம் -

இங்­கி­லாந்­தின் ஆக்ஸ்­போர்ட் பல்­க­லைக்­க­ழ­கம் தயா­ரித்­துள்ள 'கோவி­ஷீல்ட்' என்­னும் கொரோனா தடுப்பு மருந்து இந்­தியா முழு­வ­தும் 17 மையங்­களில் 1,600 பேரி­டம் சோதிக்­கப்­பட்டு வரு­கிறது. தமி­ழ­கத்­தில் சென்னை அரசு பொது மருத்­து­வ­மனை, போரூர் ராமச்­சந்­திரா மருத்­து­வ­மனை ஆகி­ய­வற்­றி­லும் சோதனை முயற்­சி­கள் நடக்­கின்­றன. சென்னை அரசு பொது மருத்­து­வ­ம­னை­யில் 'கோவி­ஷீல்ட்' தடுப்­பூசி 65 தொண்­டூ­ழி­யர்­க­ளுக்கு செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து கூறிய தமி­ழக சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள், 65 பேரில் இது­வரை யாருக்­கும் எவ்­வி­தப் பிரச்­சி­னை­யும் ஏற்­ப­ட­வில்லை என்­றும் அவர்­க­ளைத் தொடர்ந்து கண்­கா­ணித்து வரு­வ­தா­க­வும் தெரி­வித்­துள்­ள­னர்.

மேலும், 18 வய­துக்கு மேற்­பட்ட, ஆரோக்­கி­ய­மான அனை­வ­ரும் கொரோனா தடுப்­பூசி பரி­சோ­த­னைக்கு முன்­வ­ர­லாம் என்­றும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பின்­னர் எப்­போ­தும் போல வேலைக்­குச் செல்­லலாம் என்­றும் சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.