கொவிட்-19 தொற்று, மரணம் தமிழகத்தில் பெரும் சரிவு

தமி­ழ­கத்­தில் கொவிட்-19 தொற்­று­கி­டு­கி­டுவென குறைந்து வருவதாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். இருந்­தா­லும் அந்­தக் கிரு­மிக்கு எதி­ரான போராட்டத்­தில் தொய்வு இடம்­பெ­றாது என்று அவர்­கள் உறுதி கூறி­னர். அந்த மாநி­லத்­தில் சனிக்­கிழமை­யன்று 78,896 பேர் பரி­சோ­திக்­கப்­பட்­ட­னர். அவர்­களில் கிருமி தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்கை 2,886 ஆக இருந்­தது.

கடந்த ஜூன் 24க்குப் பிறகு சனிக்­கி­ழ­மை­தான் கிருமி தொற்றி­யோ­ரின் எண்­ணிக்கை முதல் முத­லாக 3,000க்கும் குறை­வாக இருந்­தது என்­றும் மாநிலத்­தின் சுகா­தா­ரத் துறை தெரி­வித்­தது. அதே வேளை­யில், குணம் அடை­வோர் அதி­க­ரித்து வரு­கிறார்­கள். கொவிட்-9 பரி­சோ­த­னை­கள் முடுக்­கி­வி­டப்­பட்டு இருந்­தா­லும் தொற்று குறை­வது நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தி வரு­வ­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர்.

தமி­ழ­கத்­தில் நாள்­தோ­றும் புதி­தாகக் கிருமி தொற்­றி­யோர் எண்­ணிக்கை கிடு­கி­டு­வென கூடி 6,000த்தை தொட்­டது. என்­றா­லும் அண்­மைய நாட்­களில் அது வேக­மா­கக் குறைந்து வரு­கிறது. அங்கு சனிக்­கி­ழமை நில­வ­ரப்­படி மொத்­தம் 706,136 பேர் பாதிக்­கப்­பட்டு இருந்­த­னர். அவர்­களில் 663,456 பேர் குண­ம­டைந்­து­விட்­ட­னர். 31,787 பேர் சிகிச்சை பெற்று வந்­த­னர். சனிக்­கி­ழமை மாநி­லம் முழு­வ­தும் 35 பேர் மர­ணமடைந்­த­னர். அவர்­க­ளை­யும் சேர்த்து மொத்­தம் 10,893 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

தமி­ழ­கத்­தின் மிக முக்­கிய அரசு மருத்­து­வமனையான சென்னை ராஜீவ் காந்தி மருத்து­வ­ மனையில் சனிக்­கி­ழமை யாரும் மர­ணம் அடை­ய­வில்லை என்­றும் இது மிக­வும் குறிப்­பி­டத்­தக்­கது என்­றும் சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது. அந்த மருத்­துவ­மனை சனிக்­கி­ழமை 26,000 பேருக்­கும் அதி­க­மா­னோரை பரி­சோ­தித்­தது. அவர்­களில் 270 பேருக்­குத் தொற்று இருந்­தது. 290 பேருக்­குத் தொற்று இருக்­க­லாம் என்று சந்­தே­கிக்­கப்­பட்­டதாகவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!