மணமக்களுக்கு வெங்காயம் பரிசளித்த மங்கையர்

மணமக்களுக்கு வெங்காயம் பரிசளித்த மங்கையர்

1 mins read
bd46966f-83eb-4a63-8b50-f575ee8dd394
-

புதுக்­கோட்டை: புதுக்­கோட்டை அருகே உள்ள கிடா­ரம்­பட்­டி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மாநில உண­வுத்துறை அமைச்­சர் ஆர்.காம­ராஜ், "மழை­யின் காரணமாகத் தான் வெங்­கா­யம் விலை உயர்ந்து உள்­ளது. இந்த விலை உயர்வு குறித்து அரசு அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­கிறது. இந்த உயர்வு தொடர்ந்து நீடித்தால் நியாய விலைக் கடை­களில் வெங்­கா­யத்தை விநி­யோ­கம் செய்­ய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என்றார்.

இதற்­கி­டையே, வெங்­கா­யத்தை அதி­க­ளவு கொள்­மு­தல் செய்­வ­தற்­காக மகா­ராஷ்­டிர மாநி­லத்துக்கு கூட்­டு­ற­வுத் துறை அதி­கா­ரி­கள் சென்­றுள்­ளனா். இத­னால், அடுத்த வாரம் முதல் அதிகள­வில் வெங்­கா­யம் விற்­பனை செய்­யப்­படும் என கூறப்படுகிறது.

ஆரணியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில் ஷீபா சுவிதா- செந்தில்குமார் தம்பதிகளுக்கு மணமகளின் தோழிகள் வெங்காயத்தைப் பரிசாக அளித்தனர். வெங்காயம் விலை திடீரென கிலோவுக்கு ரூ.100 வரை அதிகரித்துள்ள நிலையில் 5 கிலோ வெங்காயத்தை பூச்செண்டு போல அலங்கரித்து மணப்பெண்ணின் தோழிகள் திருமணப் பரிசாக அளித்தனர். படம்: தமிழக ஊடகம்