ரூ.2 லட்சம் மோசடி; போலிச் சாமியார்கள் நால்வர் கைது

பெரம்­பூர்: "வீட்­டில் மந்­தி­ரம் செய்து வைத்­துள்­ள­னர். அதை எடுக்­கா­மல் விட்­டு­விட்­டால் உங்­கள் உயி­ருக்கே ஆபத்து," என்று கூறி தென்­காசியைச் சேர்ந்த ஓட்டு­நர் ஒரு­வ­ரி­டம் ரூ.2 லட்­சத்தை மோசடி செய்த புகா­ரின் தொடர்­பில், போலிச் சாமி­யா­ரின் கூட்­டா­ளி­கள் நால்­வர் கைது செய்­யப்­பட்­ட­னர். தலை­மறைவான போலிச் சாமி­யா­ரை­யும் தனிப்படை போலி­சார் தேடி வரு­கின்­ற­னர்.

தென்­காசி மாவட்­டம், செங் கோட்டை தாலுகா, மீனாட்சிபுரத்­தைச் சேர்ந்­த­வர் ராஜ­கு­மா­ரன், 45. வேன் போன்ற வாக­னத்­தை­யும் இவர் ஓட்டி வந்­துள்­ளார்.

கடந்த சில தினங்­க­ளுக்கு முன்பு மீனாட்­சி­பு­ரத்­தில் இருந்து புளி­யங்­குடி சென்றுகொண்­டி­ருந்தவர், சாலை ஓரத்­தில் அமர்ந்­தி­ருந்த சாமி­யா­ரி­டம் குறி கேட்­டுள்­ளார். அப்­போது அந்த சாமியாா், "உனக்கு வேண்­டா­த­வர்­கள் உனது வீட்­டில் மந்­தி­ரம் செய்து வைத்­துள்­ள­னர். அதை எடுக்­கா­விட்­டால் உயிர்ப் பலி ஏற்­படும். அதை எடுக்க ரூ.2 லட்­சத்­து­டன் இரண்டு கோழிகளு­டன் சென்­னைக்கு வந்து என்­னைப் பார்," என்று கூறியுள்­ளார்.

ராஜ­கு­மா­ரனும் தனது வேனை விற்று அதில் கிடைத்த ரூ.2 லட்­சம் பணம், இரு கோழிகளு­டன் உற­வி­னர் ஒரு­வருடன் சென்னை வந்­துள்­ளார். வண்­ணா­ரப்­பேட்டை ஸ்டான்லி மருத்­து­வ­மனை அருகே போலிச் சாமி­யார் பணத்­தை­யும் கோழிகளை­யும் வாங்­கிக்­கொண்டு, பூசைப் பொருட்­கள் வாங்கி வருவதாகக் கூறி­விட்டு தப்­பி­விட்­டார்.

தான் ஏமாற்­றப்­பட்­டதை அறிந்த ராஜ­கு­மா­ரன், வண்­ணா­ரப்­பேட்டை போலி­சில் புகார் செய்­தார். அப்­பகு­தி­யில் இருந்த கண்­கா­ணிப்பு கேமரா பதி­வு­க­ளை­யும் போலி சாமியாரின் கைபேசி எண்­க­ளை­யும் வைத்து நடத்­திய விசா­ர­ணை­யில், திரு­வள்­ளூர் மாவட்­டத்தைச் சேர்ந்த யுவ­ராஜ், 45, என்பவர் போலிச் சாமியாராக நடித்தது தெரியவந்தது. இவர் இன்­னும் பிடி­ப­ட­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!