குற்றம் செய்தவர் இடமாற்றம்; குற்றம் சொன்னவர் கைது

சேலத்­தில் குரங்­கு­க­ளைப் பிடிக்­கும்­போது உரிய விதி­களை பின்­பற்­றா­மல் இரும்­புக் கம்­பி­யால் அடித்து துன்­பு­றுத்­தி­யது உறுதியானதால் வனச்­ச­ர­கர் சர­வ­ணன் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டார்.

வனச்­ச­ர­கர் மீது புகார் அளித்த சமூக ஆர்­வ­லர் மோகன்­கு­மார் மீது பதி­லுக்கு வழக்குப் போட்டு, அவரைக் கைது செய்து, சேலம் மத்­திய சிறை­யில் அடைத்தனர்.

தவறு செய்த ஊழி­யர்­கள் மீது புகார் கூறி­னால், குற்­றத்தை சுட்­டிக்­காட்­டி­ய­வர் மீதே வழக்கு போட்டு, கைது செய்­யும் புதிய உத்­தியை சேலம் மாவட்ட வனத் துறை கையில் எடுத்­துள்­ள­தாக மக்­கள் விமர்­சித்து உள்ள­னர்.

சேலம் மாவட்­டம், ஏற்­காடு மலை அடி­வா­ரப் பகு­தி­யில் ஏராள மான குரங்­கு­கள், காட்­டுப்­பன்­றி­கள், முயல்­கள், காட்­டு­மா­டு­கள் வசிக்­கின்­றன.

அடி­வா­ரம் அருகே உள்ள தேநீர்க் கடை­கள், பேக்­க­ரி­கள், கல்­யாண மண்­ட­பத்­துக்­குள் கூட்­ட­மாக நுழைந்து இந்தக் குரங்­கு­கள் பெரும் அட்­ட­கா­சம் செய்­வ­தாகவும் புகார்­கள் கிளம்­பின.

இதை­ய­டுத்து, வனத்துறை ஊழி­யர்­கள் குரங்­கு­களைப் பிடிக்­கும் பணி­யில் ஈடு­பட்­ட­னர். அப்­போது சர­வ­ணன் குரங்­கு­களை இரும்­புக் கம்­பி­யால் தாக்கியுள்ளார்.

இதைப்­பார்த்த அப்­ப­கு­தியைச் சேர்ந்த மோகன்­கு­மார், 44, சேலம் மண்­டல வனப்­பா­து­கா­வ­லர் பெரிய சாமி­யி­டம் புகார் அளித்­தார்.

இதை­ய­டுத்து, வனச்­ச­ர­கர் சர­வ­ணன் நாமக்­கல் சோத­னைச்­சா­வ­டிக்கு இட­மாற்­றம் செய்யப் பட்டார். இதற்­கி­டையே, மலை அடி­வா­ரத்­திற்கு வரும் குரங்­கு­க­ளுக்கு வனச்­சட்ட விதி­களை மீறி உணவு வழங்­கி­ய­தாக மோகன்­கு­மார் கைது செய்யப்பட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon