காளைகள் பூட்டிய வண்டியை முதல்வருக்குப் பரிசளித்த அமைச்சர்

1 mins read
38379952-c393-476d-964f-b666ffe01e4c
படம்: தமிழக ஊடகம் -

புதுக்கோட்டைக்கு அண்மையில் வந்த முதல்வர் பழனிசாமிக்கு 300 மாட்டு வண்டிகளில் சென்று விவசாயிகள் வரவேற்பு அளித்தனர்.

முழுக்க முழுக்க மரத்தால் தயாரிக்கப்பட்ட மாட்டு வண்டியையும் இரு காளைகளையும் நினைவுப் பரிசாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வருக்கு வழங்கினார்.

இந்தக் காளைகள் பூட்டிய மாட்டுவண்டி முதல்வரின் சொந்த ஊரான சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்திற்கு நேற்று முன்தினம் வழி அனுப்பி வைக்கப்பட்டன.

அமைச்சர் விஜயபாஸ்கர் 5 கி.மீ. வரை வண்டியை ஓட்டிச்சென்றார். அதன்பின்னர் மாட்டு வண்டி முதல்வரின் சொந்த ஊருக்கு சாலை மார்க்கமாகச் சென்றது.