சென்னையில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது

சென்னை ராயப்­பேட்­டை­யில் திங்களன்று நள்­ளி­ரவு நேரத்­தில் பழைய ஐந்து மாடிக் கட்­ட­டம் ஒன்று சீட்­டுக்­கட்டு போல சட­ச­ட­வென்று சரிந்து விழுந்து விபத்­துக்­குள்­ளா­னது.

பயங்­கர சத்­தத்­து­டன் கட்­ட­டம் இடிந்து விழுந்­த­தைக் கண்டு அப் பகுதி மக்­கள் அதிர்ந்து போனார்கள்.

சென்னை ராயப்­பேட்டை புதுக் கல்­லூ­ரிக்கு எதிரே பழைய ஐந்து மாடிக் கட்­ட­டம் ஒன்று இருந்­தது.

இந்­தக் கட்­ட­டத்தை காங்­கி­ரஸ் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜே.எம். ஆரு­ணின் மகள் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்­நி­லை­யில், பழைய கட்ட டத்தை இடித்­து­விட்டு புதுக் கட்­ட­டம் கட்­டு­வ­தற்­காக இக்கட்­ட­டத்­தில் வசித்து வந்­த­வர்­க­ளைக் காலி செய்­யும்­படி கூறி­யுள்­ள­னர்.

ஆனால், கட்டடத்தில் வசித்த வர்கள் வீட்டைக் காலி செய்­வ­தற்கு நஷ்ட ஈடு தரும்­படி கேட்­டுள்­ள­னர்.

இதைத்­தொ­டர்ந்து, கட்­ட­டம் வாங்­கி­ய­வர்­கள் தரப்­பி­லி­ருந்து கொடுக்­கப்­பட்ட நஷ்­ட­ஈட்டை பெற்­றுக்­கொண்டு, அங்கு வசித்து வந்த 13 குடும்­பத்தில் 12 குடும்பத்­தி­னர் காலி செய்­து­கொண்டு சென்று­விட்­ட­னர்.

ஆனால், ரெஜினா பேகம் என்­ப­வர் மட்­டும் வீட்­டைக் காலி செய்ய முடியாது என்று கூறி ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்­டு­ம் என்று வழக்கு தொடர்ந்­துள்­ளார்.

இந்த வழக்கு நீதி­மன்­றத்­தில் நிலு­வை­யில் இருப்­ப­தா­க­வும் கூறப்­படு­கிறது.

இந்­நி­லை­யில், திடீ­ரென இந்­தக் கட்­ட­டம் இடிந்து விழுந்ததை அடுத்து, திரு­வல்­லிக்­கேணி, மயி­லாப்­பூர், எஸ்­பி­ள­னேட், தேனாம்­பேட்டை ஆகிய பகு­தி­க­ளி­லி­ருந்து நான்கு தீய­ணைப்பு வாக­னங்­களில் வந்த மீட்­புப் படை­யி­னர் கட்­டட இடிபாடு­களை அப்­பு­றப்­ப­டுத்­தும் பணியில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

கடந்த சில தினங்­க­ளா­கச் சென்­னை­யில் பெய்துவரும் மழை­யின் கார­ண­மா­கவே இந்­தக் கட்­ட­டம் இடிந்து விழுந்­தி­ருக்­க­லாம் என்­றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்­தக் கட்­ட­டத்­தின் மேற்­ப­குதி யில் கைபேசி கோபு­ரங்­கள் இருந்த தாக­வும் அப்­ப­குதி மக்­கள் கூறி­யுள்­ள­னர்.

அதிர்ஷ்­ட­வ­ச­மாக இடி­பா­டு­களில் யாரும் சிக்­க­வில்லை என்று கூறப்­படு­கிறது. கட்டடக் காவ­லா­ளி­யும் குழந்­தை­யு­டன் இருந்த பெண்­ணும் விபத்து நடந்த சமயத்தில் அந்தக் கட்டடத்தில் இல்லை என்­றும் அப்­­பகுதி மக்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

எனவே, உயிர்ச்சேதம் எது­வும் ஏற்­ப­ட­வில்லை. இருப்பினும் சரக்கு வாகனங்கள், கார்கள் நொறுங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

தீய­ணைப்­புத் துறை இணை இயக்­கு­நர் பிரியா ரவிச்­சந்­தி­ரனின் உத்தரவின்படி, மீட்­புப் பணி­கள் துரிதமாக நடந்து வரு­கின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon