திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு நகைக்கடை அதிபர் செலுத்திய பிரம்மாண்ட காணிக்கை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு நகைக்கடை அதிபர் செலுத்திய பிரம்மாண்ட காணிக்கை

1 mins read
4d000d8e-740f-4058-9b29-a3b6b5033a08
sஉவாமிக்கு சாற்ற்றப்பட்ட கிரீடம். படங்கள்: தமிழக ஊடகம் -
multi-img1 of 2

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உள்ள உற்சவருக்கு 3 கிலோ எடையுள்ள தங்கத்தில் 'பாண்டியன் கொண்டை' எனும் கிரீடத்தை தியாகராய நகரில் கடை வைத்துள்ள நகைக்கடை அதிபர் ஜெயந்திலால சலானி என்பவர் காணிக்கையாக அளித்துள்ளார்.

இதில் தங்கம் மட்டுமல்லாது வைரம், மரகதம் உள்ளிட்ட ஒன்பது வகையான விலையுயர்ந்த கற்களும் பதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 11 மாதங்களாக தனது நகை பட்டறையில் இதனை வடிவமைத்துள்ளார் ஜெயந்திலால். இதையடுத்து நேற்று (அக்டோபர் 27) காலை தனது குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்று காணிக்கையாக கிரீடத்தை சமர்ப்பித்தனர்.

ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதருக்கு பாண்டிய மன்னன் தனது ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற கிரீடத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளார்.

அதன் பின்னர் இப்போதுதான் இவ்வளவு விலை உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.