கட்காரி: ரூ.5,000 கோடியில் சென்னையில் ஈரடுக்கு பாலம்

சென்னை: சென்­னை­யில் போக்கு வரத்து நெரி­ச­லைக் குறைக்­கும் வகை­யில், சென்னை துறை­மு­கத்­தில் இருந்து மது­ர­வா­யல் வரை ரூ.5,000 கோடி­ செலவில் உல­கத் தரத்­து­டன் கூடிய ஈர­டுக்கு மேம்­பா­லம் கட்­டப்­படும் என மத்­திய அமைச்­சர் நிதின் கட்­காரி தெரி­வித்­துள்­ளார்.

சென்னை எம்­ஆர்சி நக­ரில் உள்ள தனி­யார் நட்­சத்­திர விடுதி யில் மத்­திய சாலைப் போக்­கு­வரத்து, நெடுஞ்­சா­லைத் துறை அமைச்­சருமான நிதின் கட்­கா­ரியை தமி­ழக முதல்­வர் கே. பழ­னி­சாமி சந்­தித்­துப் பேசி­னார்.

இந்த சந்­திப்­புக்­குப் பின் செய்தி­யா­ளர்­க­ளி­டம் நிதின் கட்­காரி பேசி­ய­போது, “சென்­னை­யில் ரூ.5,000 கோடி செல­வில் அைனத்­து­ல­கத் தரத்­தில் ஈர­டுக்கு மேம்­பா­லத்தை அமைப்பதற்கு மத்­திய அரசு முன்­மொ­ழிந்­துள்­ளது.

“இந்த மேம்­பா­லத்­தின் மூலம் சென்­னை­யில் போக்­கு­வ­ரத்து நெரி­சல் கணி­ச­மா­கக் குறை­யும்.

“சென்னை துறை­மு­கத்­தில் இருந்து மது­ர­வா­யல் வரை அமைக்­கப்­படும் இம்மேம்­பா­லக் கட்­டுமானப் பணி­கள் வரும் ஜன­வரி மாதத் துக்கு முன்­பே தொடங்கி­விடும்.

“மேம்­பா­லத்தை ஈர­டுக்கில் வடி ­வ­மைக்க அைனத்­து­லக நிறு­வ­னங்­க­ளு­டன் ஆலோ­சனை நடத்தப் பட உள்­ளது. இந்த மேம்­பா­லப் பணி கள் முடிந்த பி­றகு அடுத்த 20-25 ஆண்டு­ காலம்வரை சென்­னைக்கு எந்த ஒரு பிரச்­சி­னை­யும் இருக்­காது,” என நம்பிக்கை தெரிவித்தார்.

இத்­திட்­டத்­திற்­காக இரும்பு, சிமெண்ட் பொருட்­க­ளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்­கப்­படும் என­வும் இத­னால் மாநில அர­சுக்கு ரூ.500 கோடி ரூபாய் மிச்­ச­மா­கும் என­வும் முதல்­வ­ரி­டம் கூறிய நிதின் கட்­காரி, மத்­திய அர­சும் தேசிய நெடுஞ்­சா­லைத் துறை­யும் இணைந்து ரூ.1,000 கோடி செலவை ஏற்­க­ உள்ளதா­க­வும் சொன்னார்.

“சென்­னை­யில் பல்­மு­னைய சரக்­குப் போக்­கு­வ­ரத்துப் பூங்கா அமைக்­கும் பணி­கள் விரை­வில் தொடங்­கப்­பட்டு 2021 ஜன­வ­ரிக்­குள் முடிக்­கப்­படும். இந்தச் சரக்கு முனை­யத் திட்­டம் மிக­வும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்த ஒன்­றா­கும். இந்த திட்­டத்­துக்­கான ஒத்­து­ழைப்பை நல்கிய தமி­ழக முதல்­வ­ருக்கு நன்றி,” என்றார் நிதின் கட்­காரி.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி முதல்வர் பழனிசாமி யுடன் தமிழகத்தில் நெடுஞ்சாலை கட்ட மைப்புப் பணிகளின் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி னார். மேம்பாலத்தை ஈரடுக்கில் வடிவமைக்க அைனத் துலக நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் முதல்வரிடம் கட்காரி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!