சுடச் சுடச் செய்திகள்

கிராமத்தை தொழில்நுட்பத்தால் காவல் காக்கும் வெளிநாடுவாழ் தமிழர்கள்

ராம­நா­த­பு­ரம்: ராம­நா­த­பு­ரம் மாவட்­ட­தைச் சேர்ந்த வெளி­நா­டு­ வாழ் தமி­ழர்­கள், தங்­கள் கிரா­மத்­தில் இனி­யும் எந்த ஒரு குற்­றச் சம்­ப­வ­மும் நடந்து­வி­டக்கூடாது என்­ப­தில் உறுதி­யாக உள்­ள­னர்.

இதற்­காக அவர்­கள், தங்­கள் கிரா­மம் முழு­வ­தும் கண்­கா­ணிப்புக் கருவிகளைப் பொருத்தி 24 மணி நேரமும் காவல் காத்து வரு­கின்­ற­னர்.

அனைத்துப் பிரச்சினை­க­ளுக்­கும் காவல்­து­றையை மட்­டுமே நம்பி இருந்த கொம்­பூதி கிராம மக்­கள், இளை­ஞர்­கள் பொருத்­தியுள்ள இந்தக் கண்­கா­ணிப்புக் கருவிக­ளால் தாங்கள் பாது­காப்­பாகவும் பெரும் நிம்மதியுடனும் உணர்வதாகக் கூறி­யுள்­ள­னர்.

ராம­நா­த­பு­ரம் மாவட்­டத்­தில் உள்ள கொம்­பூதி கிரா­மத்­தில் சுமார் 300க்கும் மேற்­பட்ட குடும்­பத்­தி­னர் வசித்து வரு­கின்­ற­னர்.

இவர்­களில் 150க்கும் மேற்­பட்ட இளை­ஞர்­கள் மலே­சியா, சிங்­கப்­பூர், துபாய் உள்­ளிட்ட நாடு­களில் பணி­புரிந்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், கடந்த மாதத்­திற்கு முன்பு இந்த கிரா­மத்­திற்­கும் பக்கத்து கிரா­மத்­திற்­கும் இடையே மோதல் உரு­வா­னது.

இதை­ய­டுத்து, இங்­குள்ள கோயி­ல் உண்­டி­யல் பணம் ரூ.60,000 கொள்­ளை போனது.

­இந்­தச் செய்­தி­யைக் கேட்டு கவ­லை­ய­டைந்த வெளி­நாடு வாழ் கொம்­பூதி கிராம இளை­ஞர்­கள் குற்­றங்களைத் தடுக்க எழு­வர் கொண்ட குழுவை அமைத்தனர்.

இந்தக் குழுவினர், 24 மணி­நே­ர­மும் இயங்­கும் 24 கண்காணிப்பு புகைப்படக் கருவி­களைக் கிரா­மம் முழு­வ­தும் பொருத்தினர்.

மின்­சா­ரம் இல்­லாத நேரத்­தி­லும் கண்­கா­ணிக்­கும் வகை­யில் ஆறு மின் சேமிப்பு கலம்களும் பொருத்­தப்­பட்டுள்­ளன.

இவை அனைத்துக்குமான மூன்­றரை லட்ச ரூபாய் செலவை வெளி­நாட்­டில் வசிக்­கும் இளைஞர்­களே ஏற்­றுக்­கொண்­டுள்­ள­னர்.

இத­னால் கிரா­மத்­தின் எந்­த­வொரு பகு­தி­யில் குற்­றச்­செ­யல்­கள் நடந்­தா­லும் அது கருவியில் பதி­வாகி வரு­வ­தா­க­வும் இளை­ஞர்­க­ளின் இந்தப் பாதுகாப்பு உத்தி பாராட்­டுக்­கு­ரி­யது என­வும் ராம­நா­த­பு­ரம் மாவட்ட காவல்­துறை­யி­ன­ரும் அவ்­வூர் மக்­களும் வெளிநாடு வாழ் இளை­ஞர்­களை மன­தாரப் பாராட்டி வருகின்ற­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon