40 பேரின் 'காவலர்' கனவை நனவாக்கிய 'மிஸ்டர் தமிழ்நாடு'

40 பேரின் 'காவலர்' கனவை நனவாக்கிய 'மிஸ்டர் தமிழ்நாடு'

2 mins read
a0b15141-b8c7-4169-ba26-e761037d6a1b
விருதுடன் பிரபாகரன். -
multi-img1 of 2

ராணுவ வீர­னா­கும் தனது ஆசை நிறை­வே­றா­மல் போனா­லும் கிரா­மத்து ஏழை, எளிய இளை ஞர்­க­ளின் காவ­ல­ரா­கும் கனவை நன­வாக்கி வரு­கி­றார் 'மிஸ்­டர் தமிழ்­நாடு' பதக்­கம் வென்ற பிர­பா­க­ரன்.

அகில இந்­திய ஆண­ழ­கன் போட்­டி­யில் பதக்­கத்தை வென்­றுள்ள பிர­பா­க­ர­னால், தனது உய­ரம் குறை­வாக இருந்த கார­ணத்­தால் ராணு­வத்­தில் சேர­மு­டி­யாத நிைல ஏற்­பட்­டது. வயது மூப்­பின் காரணமாக ரயில்வே துறை­யில் பணியாற்­றும் வாய்ப்பும் பறி­போ­னது.

எனி­னும், இத­னால் மனம் துவளாத­வர், 40க்கும் மேலான இளை­யர்­களை காவ­லர் பணி­யில் கரை சேர்த்துவிட்­டுள்­ளார்.

திருச்சி மாவட்­டம், செந்­த­மிழ்­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் பிர­பா­க­ரன். இவர் மிஸ்­டர் திருச்­சி­ பட்டத்தையும் 'மிஸ்­டர் தமிழ்­நாடு' பட்­டத்தையும் வென்­றுள்­ளார்.

அத்­து­டன், தென்­னிந்­திய ஆண­ ழ­கன் போட்­டி­, அகில இந்­திய ஆணழகன் போட்­டி­யில், வெண்கல, வெள்ளிப் பதக்­க­மும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தன்­னைப் போன்று சாதிக்க ஏங்­கும் கிரா­மத்து ஏழை, எளிய இளை­ஞர்­களுக்குப் பயிற்­சியளித்து அவர்­களைப் பணி­ய­மர்த்தி வரு­கி­றார்.

இதற்­காக முக்­கொம்பு சுற்­றுலா மையத்­தில் காலை, மாலை இரு வேளை­க­ளி­லும் சுற்­று­வட்­டார கிரா மங்­க­ளைச் சேர்ந்த இளை­ஞர்­களுக்­கும் பெண்­க­ளுக்­கும் உடற்­ப­யிற்சி, கயிறு ஏறு­தல், ஓட்­டம், நீளம் தாண்­டு­தல் என பல்­வேறு பயிற்­சி­க­ளை­யும் பிர­பா­க­ரன் அளித்துவரு­கி­றார்.

மேலும், உடற்­ப­யிற்­சிக் கூடங்­களி­லும் தனிப்­பட்ட ஆலோ­ச­க­ராக பல­ருக்குப் பயிற்சி அளித்து, அதில் வரும் வரு­வா­யைக் கொண்டு இளை­ஞர்­க­ளுக்குப் புர­தப் பொருட்­கள், காலணி போன்­ற­வற்றை வாங்­கிக் கொடுத்து பயிற்­சி­யும் ஊக்­க­மும் அளித்து வரு­கி­றார்.

இளையர்கள் காவல்­துறை, ராணுவ வேலை வாய்ப்­பு­களில் முத்­திரை பதிக்க திறந்­த­வெளி உடற்­பயிற்சி மையங்­களைத் தமிழக அரசு ஏற்­ப­டுத்தவேண்டும் எனவும் பிரபா­கரன் கோரியுள்­ளார்.