'ரஜினி வராமல் இருப்பதே நல்லது'

'ரஜினி வராமல் இருப்பதே நல்லது'

2 mins read
ac449771-b0fd-44aa-8a46-b17a87d837fa
-

ரஜினி அர­சி­ய­லுக்கு வரா­மல் இருப்­பதே நல்­லது என்­றும் அவர் வந்­தா­ல்கூட எந்­த­வொரு மாற்­றமும் நிக­ழப்­போ­வ­தில்லை என்­றும் நாம் தமி­ழர் கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் சீமான் (படம்) தெரி­வித்துள்­ளார்.

"அர­சி­ய­லில் ரஜி­னி­காந்த், கமல்­ஹா­சனைவிட நான் மூத்­த­வன்.புகழ்ச்­சியை மட்­டுமே பார்த்த ரஜினி வை வைத்து தமி­ழ­கத்­தில் மோச­மான ஆட்­டம் நடக்­கிறது. அர­சி­ய­லில் ரஜி­னியை இறக்கி விடு­ப­வர்­களே அவரை இழி­வா­கப் பேசு­வார்­கள். ரஜி­னிக்கு ஓய்வு தேவை," என்று சீமான் கூறி­யுள்­ளார்.

ரஜினி வெளி­யிட்­ட­தாக கடி­தம் ஒன்று சமூக வலைத்­த­ளங்­களில் இரண்டு நாட்­க­ளாக பகி­ரப்­பட்டு வரு­கிறது. அதில், "அர­சி­யல் கட்சி ஆரம்­பித்­தால் ஏற்­கெனவே மாற்று சிறு­நீ­ர­கம் பொருத்­தப்­பட்ட என் உயி­ருக்கு ஆபத்து என்று மருத்­து­வர்­கள் கூறு­வ­தால் இப்­போது கட்சி துவங்க இய­ல­வில்லை," என ரஜினி கூறியதாக குறிப்பிடப்பட்டது.

ஆனால், அதனை தாம் எழு­த­வில்லை என்று கூறிய ரஜினி, அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தமது உடல்­நிலை மற்­றும் மருத்­து­வர்­கள் தமக்கு அளித்த அறி­வு­ரை­கள் குறித்த தக­வல்­கள் அனைத்­தும் உண்மை என்­றும் தமது டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில், ரஜி­னி­யின் அண்­ணன் சத்ய நாரா­யணா, கொரோனா பர­வல் காலத்­தில் தமது தம்­பி­யின் (ரஜி­னி­யின்) உடல்­ந­லனே முக்­கி­யம் என்று தெரி­வித்­துள்­ளார்.

"அர­சி­யல் கட்சி தொடங்­கு­வ­தில் ரஜினி உறு­தி­யாக இருந்­தார். ஆனால் கொரோனா கிரு­மிப் பர­வல் கார­ண­மாக கட்சி பெயர், கொடி போன்­ற­வற்றை அறி­விப்­பது தள்­ளிப்போனது. இல்­லை­யென்­றால் அவர் கண்­டிப்­பாக அறி­வித்­தி­ருப்­பார். ரஜி­னி­யின் உடல்­நிலை இப்­போது நன்­றாக உள்­ளது. மருத்­து­வர்­க­ளின் ஆலோ­ச­னைப்­படி அவர் இருப்­பது அவ­சி­யம். அவ­ரது அர­சி­யல் நிலைப்­பாடு குறித்து ஜன­வரி மாதம் தெரிய வரும்," என்று அவர் புதிய தலை­முறை செய்­தி­யா­ள­ரி­டம் தெரி­வித்­துள்­ளார்.