விருப்ப ஓய்வு கோரி சகாயம் ஐ.ஏ.எஸ் விண்ணப்பம்

விருப்ப ஓய்வு கோரி சகாயம் ஐ.ஏ.எஸ் விண்ணப்பம்

1 mins read
a9f87e2f-fa8f-4aca-8cca-14e1cc2663b8
படம்: ஊடகம் -

தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார் திரு சகாயம். முக்கியத்துவமற்ற ஒரே பதவியில் பல ஆண்டுகளாக தமிழக அரசு வைத்திருப்பதால் அவர் விருப்பு ஓய்வு பெற விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில், அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அடுத்த 2 மாதங்களில் அரசு பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார்.

சகாயம் ஐ.ஏ.எஸ். மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வருகிறார்.

மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்த திரு சகாயம், அரசியலுக்கு வரவேண்டுமென அண்மைய ஆண்டுகளில், தமிழகத்தில் சிலர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.