இணைய சூதாட்ட விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் நடிகை தமன்னாவுக்கும் (படம்) மதுரை உயர் நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இணையம் வழி விளையாடப்படும் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளை யாட்டுகளால் பலரும் பெரும் பணத்தை இழப்பதுடன் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர். கடந்த 10 நாள்களில் தமிழகத்தில் மூவர் இப்படி இறந்துள்ளனர்.
இந்நிலையில் இணைய சூதாட்ட கைபேசி செயலி விளம்பரத்தில் நடித்த கோலி, தமன்னா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த பிப்ரவரி மாதம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசார ணையில், உங்களைப் பொது மக்கள் பலரும் பின் தொடர் கிறார்கள் என்று தெரிந்தும் இந்த சூதாட்ட விளம்பரத்தில் நடித்தது ஏன் என உயர் நீதி மன்ற கிளை கேள்வி எழுப்பி, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.