வேளாண் பல்கலை: அடுத்த ஆண்டில்தான் வெங்காய விலை குறையும்

கோவை: வரும் 2021ஆம் ஆண்டு ஜன­வரி, பிப்­ர­வரி மாதங்­க­ளில்­தான் வெங்­கா­யத்­தின் விலை குறை­யும் என்று கோவையில் அமைந்­துள்ள தமிழ்­நாடு வேளாண்­ பல்­க­லைக்­க­ழ­கம் கணித்­துக் கூறியுள்­ளது.

“புதிய வெங்­கா­யப் பயி­ரின் அறு­வ­டைக் கால­மா­கிய ஜன­வரி, பிப்­ர­வரி மாதங்­க­ளில்­தான் வெங்­காய விலை குறை­யும்,” என்­றும் பல்­க­லைக்­க­ழ­கம் தெரிவித்தது.

கடந்த இரு ­வா­ரங்­க­ளுக்­குள் வெங்­கா­யத்­தின் விலை அதிகம் உயர்ந்து மக்­க­ளைப் பெரி­தும் பாதித்தது. தமி­ழக அர­சின் சார்­பில் பசுமை பண்ணைக் கடை­களில் வெங்­கா­யம் கிலோ ரூ.45க்கு விற்­கப்பட்டது. ஒரு­வருக்கு இரண்டு கிலோ மட்­டுமே தரப்­பட்­டது.

இந்­நி­லை­யில், மாநிலத்தில் ஒரு கிலோ வெங்­கா­யத்­தின் விலை இப்­போ­தும் ரூ.100 ஆக உச்­சத்­தில் உள்ளதால் உண­வ­கம் நடத்­து­வோர் பாதிக்கப்பட்டுள்­ள­னர்.

இதை­ய­டுத்து, இந்த விைல யேற்­றத்தை சமா­ளிக்க, வெங்­கா­யத்­துக்கு பதி­லாக முட்­டைக்­கோசையும் வெள்­ள­ரிக்­காய்­க­ளை­யும் உண­வ­கத்­தி­னர் பயன்­ப­டுத்தி வரு­வதாக மதுரை ஹோட்­டல் உரி­மை­யா­ளர்­கள் சங்­கத் தலை­வர் டெம்­பிள் சிட்டி குமார் கூறி­யுள்­ளார்.

“குறிப்­பாக, ஹோட்­டல்­களில் பயன்­ப­டுத்­தப்­படும் பெரிய வெங்­கா­யத்தின் விலை உயர்ந்துள்ளதால் உண­வின் விலையை உயர்த்த வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டது.

“ஆனால், பொது முடக்­கத்துக்கு பிறகு இப்போதுதான் ஹோட்­டல்­கள் திறக்­கப்­பட்­டுள்ளன.

“இந்நிலை­யில், விலையேற்­றம் வாடிக்­கை­யா­ளர்­களைப் பாதிக்­கும் என்­ப­தால் மதுரை ஹோட்­டல் உரி­மை­யா­ளர்­கள் சங்­கத்­தி­னர் ஒன்­று­கூடி விலையை ஏற்­றக்­கூ­டாது என்று முடி­வெ­டுத்­துள்ளனர்.

“அத்­து­டன், வெங்­கா­யத்தை 50%க்கு மேல் குறைத்து, அதற்கு ஈடாக முட்­டைக்­கோஸ் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது.

“அசைவ உண­விற்கு தயிர் பச்­சடி அவசி­யம் என்­ப­தால், வெங்­கா­யத்­திற்­குப் பதி­லாக வெள்­ள­ரிக்­காய்­க­ளைப் பயன்­ப­டுத்த அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. எனினும், வெங்­கா­யம் தரக்­கூ­டிய ருசியை முட்­டை­கோஸ் தரவில்லை என்­றும் சில வாடிக்­கை­யா­ளர்­கள் குறை கூறிச் செல்கின்றனர்,” என்று சொல்லி உள்ளார் டெம்­பிள் சிட்டி குமார்.

சுவை­யான உண­வு­களை வழங்க வெங்காயம் அவ­சி­யம் எனினும், வேறு வழியின்றி முட்டைக்கோஸ், வெள்ளரிக்காயை பயன்படுத்தும் முடிவை எடுத்துள்ளோம்.

மதுரை மாவட்ட ஹோட்­டல் உரி­மை­யா­ளர்­கள்

சங்­கத் தலை­வர் டெம்­பிள் சிட்டி குமார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!