தமிழக மக்களை கடந்த ஏழு மாத கொரோனா காலகட்டம் பயத்தில் உறைய வைத்திருந்த போதிலும் ஏறக்குறைய 10,000 பிரசவங்கள் மதுரையில் வெற்றிகரமாக நடந்துள்ளன.
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கடந்த ஏழு மாதங்களில் 9,879 பிரசவங்கள் நடந்துள்ளன. இவர்களில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 266 கர்ப்பிணிகளுக்கும் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளதாக இம்மருத்துவமனை முதல்வர் சங்கு மணி தெரிவித்துள்ளார். இது கடந்த ஆண்டைவிட 1,471 பிரசவங்கள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து, கொரோனா காலங்களில் சிறப்பாகப் பணி புரிந்த மகப்பேறு பிரிவுத் துறைத் தலைவர் டாக்டர் சுமதி, மருத்து வர்கள், தாதியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு சுகாதாரத்துறை பாராட்டு தெரிவித்துள்ளது.

