மதுரையில் கொரோனா சமயத்திலும் 10,000 பிரசவம்

மதுரையில் கொரோனா சமயத்திலும் 10,000 பிரசவம்

1 mins read
40a163f7-154b-4142-bdd2-bc24b9db2518
-

தமி­ழக மக்­களை கடந்த ஏழு மாத கொரோனா கால­கட்­டம் பயத்­தில் உறைய வைத்­தி­ருந்த போதி­லும் ஏறக்குறைய 10,000 பிர­ச­வங்­கள் மதுரையில் வெற்றி­க­ர­மாக நடந்­துள்­ளன.

மதுரை அரசு இராசாசி மருத்­து­வ­ம­னை­யில் கடந்த ஏழு மாதங்­களில் 9,879 பிர­ச­வங்­கள் நடந்­துள்­ளன. இவர்­களில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 266 கர்ப்­பி­ணி­க­ளுக்­கும் பிர­ச­வம் பார்க்­கப்­பட்­டுள்­ள­தாக இம்­ம­ருத்­து­வ­மனை முதல்­வர் சங்கு மணி தெரி­வித்­துள்­ளார். இது கடந்த ஆண்டைவிட 1,471 பிர­ச­வங்­கள் அதி­கம் என்றும் கூறப்படுகிறது.

இதை­ய­டுத்து, கொரோனா காலங்­களில் சிறப்­பா­கப் பணி புரிந்த மகப்­பேறு பிரிவுத் துறைத் தலை­வர் டாக்­டர் சுமதி, மருத்து வர்­கள், தாதி­யர்­கள், மருத்­து­வப் பணி­யா­ளர்­களுக்கு சுகா­தா­ரத்­துறை பாராட்டு தெரி­வித்துள்­ளது.