காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கு அபராதம் விதித்த கீழ்பள்ளிப்பட்டு பஞ்சாயத்துத் தலைவர்களைப் போலிசார் கைது செய்தனர். சண்முகம் என்பவர் தலைமறைவான நிலையில் அவரைத் தேடி வருகின்றனர்.
பஞ்சாயத்துத் தலைவர்கள் காதல் திருமணம் செய்துகொண்ட மணமகன் வீட்டாருக்கு 40,000 ரூபாயும் பெண் வீட்டாருக்கு 10,000 ரூபாயும் அபராதம் விதித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், கீழ் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தமும் சின்ன கொல்ல குப்பம் பகுதியைச் சேர்ந்த பவானி யும் காதலித்து வந்துள்ளனர்.
இதனையறிந்த பவானியின் அப்பா நாகராஜ், பவானிக்கு வேறோர் இடத்தில் திருமணம் நடத்திவைக்க ஏற்பாடுகளைச் செய்துவந்த நிலையில், ஜீவானந்தம் பவானியை அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்டார்.
இைதத்தொடர்ந்து, பஞ்சா யத்துத் தலைவர்கள் செல்வராஜ், கமலக்கண்ணன், சண்முகம் ஆகி யோர் தம்பதிகளிடம் விசாரணை நடத்தி, ரூ.50,000 அபராதம் விதித்ததை அடுத்து, ஜீவானந்தம் காவல்நிலையத்தில் புகார் தந்தார்.
புகாரில், "முன்பெல்லாம் காதல் திருமணம் செய்யும் தம்பதியின் பெண் வீட்டாருக்கு 5,000 ரூபாயும் மாப்பிள்ளை வீட்டாருக்கு 8,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், இப்போது எங்கள் குடும்பத்தினருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் 5 பைசா வட்டிக்கு ரூ.20,000 பணத்தை வாங்கி பஞ்சாயத்தாரிடம் செலுத்தினோம். மீதமுள்ள பணத்தை ஒரு வாரத்திற்குள் செலுத்தும்படி கட்டாயப்படுத்துகின்றனர். கூலி வேலை செய்யும் எங்களால் எப்படி உடனே அவ்வளவு பணத்தை தர இயலும்?" என்று கேட்டிருந்தனர். இந்நிலையில், இருவர் கைதாகி உள்ளனர்.

