புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்

1 mins read
51cb146b-e341-43f2-a19a-9cfe614fd174
-

இந்­தி­யா­வி­லேயே முத­லீ­டு­களை அதிக அளவில் ஈா்ப்ப­தில் தமி­ழ­க மாநிலம் முதலிடத்தில் ­இருப்பதாக 'கேர்' என்ற ஆய்வு நிறு­வ­னம் தெரிவித்­துள்­ளது.

மத்­திய அர­சின் பொரு­ளா­தார விவ­ரங்­க­ளின் அடிப்­ப­டை­யில், இந்த நவம்­பர் மாதம் ஒன்­றாம் தேதி வரையிலான விவரங்களை மதிப்பீடு செய்து, 'கேர்' ஆய்வு நிறு­வ­னம் தகவல்­களை வெளியிட்­டுள்­ளது.

கடந்த ஐந்து ஆண்­டு­களைக் காட்டிலும் இவ்வாண்டு ஏப்­ரல் முதல் செப்­டம்­பர் மாத காலகட்டத் தில் இந்­தியாவால் ஈர்க்கப்படும் முத­லீ­டு­கள் கடும் வீழ்ச்­சி அடைந்தன. எனினும், இந்­தி­யா­வி­லேயே தமிழகம் அதிக அளவில் புதிய முத­லீடு­களை ஈர்த்துள்­ளது.

முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தில் கடந்த ஆண்டு மூன்­றா­வது இடத்­தில் இருந்த தமி­ழ­கம், இந்த ஆண்டு மகா­ராஷ்­டிர மாநி­லத்­தை­யும் வீழ்த்தி முத­லி­டம் பிடித்துள்ளது.

தமி­ழ­கம் இந்த நிதி­யாண்­டின் முதல் காலாண்­டில் மட்­டும் ரூ.20,000 கோடி அள­வுக்கு முத­லீ­டு­களை ஈர்த்­துள்­ளது.

அதா­வது இந்தியாவுக்கு வந்த மொத்த முத­லீ­டு­களில் 16% அள­வுக்கு தமி­ழ­கம் ஈா்த்துள்­ளது.

இதே கால­கட்­டத்­தில் ஆந்­திர மாநி­லம் 11% முத­லீ­டு­க­ளை­யும் மகா­ராஷ்­டிரா, ராஜஸ்­தான், கர்­நா­டகா மாநி­லங்­கள் தலா ஏழு விழுக்­காடு முத­லீ­ட்டையும் ஈா்த்துள்­ளன.

கடந்த மாத இறு­தி­யில் மட்­டும் 17,000 முதல் 18,000 பேருக்கு புதி­தாக வேலை வாய்ப்­பு­கள் கிடைக்­கும் வகை­யில் ரூ.10,062 கோடி மதிப்­புள்ள ஒன்­பது புதிய திட்­டங்­க­ளுக்கு தமி­ழ­கத்­தில் அடிக்­கல் நாட்­டப்­பட்­டது.

கொரோனா கால நெருக்­க­டி­யி­லும் தமி­ழ­கம் புதிய முத­லீ­டு­களில் சாதனை படைத்திருப்பதாக முதல்­வர் பழ­னி­சா­மிக்குப் பாராட்­டு­களும் வாழ்த்துகளும் குவி­கின்­றன.

.