அரிசி முதல் ஆடு வரை... கரண்டி முதல் அண்டா வரை... கார் முதல் டிராக்டர் வரை... திருமணத்தில் பல கோடி மதிப்பில் சீர்வரிசை

அரிசி முதல் ஆடு வரை... கரண்டி முதல் அண்டா வரை... கார் முதல் டிராக்டர் வரை... திருமணத்தில் பல கோடி மதிப்பில் சீர்வரிசை

1 mins read
536893d7-aa00-4f7b-817b-a3575001cebe
படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

மதுரை பதினெட்டாங்குடி பகுதியைச் சேர்ந்த மதுரை கிழக்கு தொகுதியின் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன் - அரசி தம்பதியரின் மகள் ஆர்த்திக்கும், மதுரை கொடிமங்கலம் பகுதியை சேர்ந்த வைத்தியநாதன் - சித்ரா தம்பதியரின் மகன் வெற்றிவேலுக்கும் இம்மாதம் 4ஆம் தேதி நாகமலைபுதுக்கோட்டை பகுதியிலுள்ள பிரம்மாண்ட திருமண மஹாலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

அந்தத் திருமணத்தில் மணமகளுக்கு சுமார் 200 சவரன் நகை போட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

ஓராண்டுக்குத் தேவையான அனைத்து விதமான மளிகைப்பொருள்கள் முதல் வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருள்களும் சீராக வழங்கப்பட்டன.

வரிசைப் பொருள்களைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்டா, பானை, குடம் என நூற்றுக்கணக்கான பித்தளை, செம்புப் பொருள்களை பெண்கள் வரிசையில் சுமந்து செல்வதையும் அந்தக் காணொளியில் பார்க்க முடிந்தது.

சீர்வரிசையில் இருசக்கர வாகனங்கள், கார், டிராக்டர் மட்டுமின்றி ஆடுகளும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்