திருத்தணி: வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பிரத்யேக வாகனம் மூலம் இந்த யாத்திரையைத் தொடங்கி, கையில் வேலுடன் திருத்தணி கோயிலுக்குச் சென்றார். இந்த யாத்திரை யில் ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில், திருத்தணி யில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற தாக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட 508 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தடை மீறல், அத்துமீறல், ஆர்ப்பாட்டம், அனுமதியின்றி கூட்டம் கூடுதல், சாலை மறியல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருத்தணியில் வேல் யாத்திரையைத் தொடங்க முயன்ற பாஜகவினருக்கும் போலிசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தடையை மீறி யாத்திரை செல்ல முயன்ற முருகன் உள்ளிட்ட பாஜகவினரை போலிசார் கைது செய்துள்ளனர்.

