கோவை: வடிவேலுவின் 'கிணற்றைக் காணவில்லை' நகைச்சுவைக் காட்சியைப் போல் கோவையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இங்குள்ள மக்கள் சாலை யைக் காணவில்லை என்று பதறியடித்து, தேங்காய், பழம் வைத்து சாலையை மீட்டுத் தரும்படி பூமாதேவிக்குப் பூஜைகளும் செய்துள்ளனர்.
கோவை, மேட்டுப்பாளை யம் சாலையில் இருந்து கணபதிக்குச் செல்கிறது உருமாண்டம்பாளையம் சாலை.
அண்மையில் அத்திக்கடவு குடிநீருக்காக இந்தச் சாலை யில் ராட்சச குழாய்கள் அமைக்கப்பட்டதை அடுத்து, இச்சாலையில் வாகனங்கள் செல்லமுடியாமல் போனது.
இந்நிலையில், கோயம் புத்தூர் மாவட்டச் சாலை பாதுகாப்புச் சங்கத்தினர், "இங்கிருந்த சாலையைக் காணவில்லை, நெடுஞ்சாலை யில் குழிகள்தான் ஆழக் கிணறுகள்போல் உள்ளன. இச்சாலையை எடுத்துச் சென் றது யார்?" என்று 'பிளக்ஸ்' பலகை வைத்துள்ளனர்.

