மதுரை: மதுரையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது மகளுக்கு ஆடு முதல் ஆடி கார் வரை ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்களைச் சீதனமாக வழங்கி சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்துகொடுத்துள்ளார்.
இந்தப் பொருட்களின் பட்டியலை விவரிக்கவே ஒருநாள் போதாது என்கின்றனர் திருமணத்தில் கலந்துகொண்ட விருந்தினர்கள்.
மாநிலம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாகவே சமூக வலைத்தளங்களில் இந்தச் சீர்வரிசை தொடர்பான புகைப்படங்களும் காணொளிகளும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
அந்தச் சீர்வரிசையின் புகைப்படங்களைப் பார்த்தாலே தலை சுற்றிவிடும் அளவுக்கு ஏராளமான பொருள்கள் குவிக்கப்பட்டிருந்தன.
அதுவும் ஆடு, கோழி, கார், பைக்குகள், டிராக்டர், தங்கத் தட்டுகள், மூட்டை மூட்டையாக அரிசி, பாத்திரக் கடை வைக்கும் அளவுக்கு பாத்திரங்கள், தொலைக்காட்சி, ஃபிரிட்ஜ், குத்துவிளக்கு, ஒரு ஆண்டுக்குத் தேவையான இதர பொருட்கள் எனச் சீர்வரிசை சாமான்கள் நிரம்பி வழிந்தன.
இத்திருமணம் எங்கு, எப்போது நடந்தது என்பதை பலரும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வந்த நிலையில், இப்போது இவ்விவரம் வெளியே கசிந்துள்ளது.
மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளரும் முன்னாள் அதிமுக எம்எல்ஏவுமான தமிழரசு தான் இப்படி தாராள தர்மபிரபுவாக தனது மகளின் திருமணத்துக்குச் சீர்வரிசைகளை வழங்கியுள்ளார்.
தமிழரசுவின் மகள் கீர்த்திக்கும் கொடிமங்கலம் பகுதியில் உள்ள வி.பி. வைத்தியநாதன் என்பவரின் மகன் வெற்றிவேல் என்பவருக்கும் கடந்த 4ஆம் தேதி நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உறவினர்கள் சூழ திருமணம் நடந்துள்ளது.
பெண்ணின் தந்தை தனது மகளுக்கு ஆடுகள், கார்கள், டிராக்டர், தங்கத் தட்டு பாத்திரம், பண்டங்களை சீர்வரிசையாக வழங்கி யுள்ளார். திருமண மண்டபத்தில் குவிக்கப்பட்டிருந்த இந்தப் ெபாருட்களைப் பார்த்து வாழ்த்த வந்தவர்கள்
வியந்துேபானார்கள்.
படம்: தமிழக ஊடகம்

