திமுக-மார்க்சிஸ்ட் தேர்தல் கூட்டணி உறுதியானது

திமுக-மார்க்சிஸ்ட் தேர்தல் கூட்டணி உறுதியானது

1 mins read

சென்னை: வரு­கிற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யிட திமு­க­வுக்­கும் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்­டுக்­கும் இடையே கூட்­டணி ஏற்­பட்­டுள்­ளது.

மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் அர­சி­யல் தலைமை குழு உறுப்­பி­னர் ஜி. ராம­கி­ருஷ்­ணன் இதனை தெரி­வித்­தார்.

திமுக-மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்­டுக்கு இடையே கூட்­டணி உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது என்­றார் அவர்.

அண்­மை­யில் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மத்­திய குழு கூட்­டம் மெய்­நி­கர் காட்சி வாயி­லாக நடந்­தது. அப்­போது, வரும் 2021ஆம் ஆண்டு சட்­ட­சபை தேர்­த­லில் திமு­க­வு­டன் கூட்­டணி அமைப்­பது என முடிவு எடுக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் மாநில செய­லர் பால­கி­ருஷ்­ணன், அர­சி­யல் தலைமை குழு உறுப்­பி­னர் ஜி.ராம­கி­ருஷ்­ணன், மத்­திய குழு உறுப்­பி­னர் சம்­பத் ஆகி­யோர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து தங்­க­ளு­டைய கட்­சி­யின் முடிவை தெரி­வித்­த­னர்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ஜி.ராம­கி­ருஷ்­ணன், திமுக-மார்க்­சிஸ்ட் கூட்­டணி வரும் சட்­ட­சபை தேர்­த­லுக்கு உறுதி செய்­யப்­பட்டு உள்­ளது என்­றார்.

வேளாண் சட்­டங்­களை திரும்பப் பெற வேண்­டும். தொழி­லா­ளர் நலச்­சட்­டங்­களை மாற்­றி­யி­ருப்­பதை ரத்து செய்ய வேண்­டும். இந்­தக் கோரிக்­கையை வலி­யு­றுத்தி தொழிற்­சங்­கங்­கள் விவ­சாய சங்­கங்­கள் கூட்­ட­மைப்பு சார்­பில் இம்­மா­தம் 26ஆம் தேதி பொது வேலை நிறுத்­தப் போராட்­டம் நடைபெறும். இதற்கு திமுக ஆத­ரவு அளிக்­கும் என்று ஸ்டா­லின் கூறி­யுள்­ளார்" என்று ஜி. ராம­கி­ருஷ்­ணன் குறிப்பிட்டு உளளார்.