தெருக்கோடியில் ஆயிரம் பிரச்சினைகள், தேடித் தீர்ப்போம் வா: கமல்ஹாசன் அழைப்பு

தெருக்கோடியில் ஆயிரம் பிரச்சினைகள், தேடித் தீர்ப்போம் வா: கமல்ஹாசன் அழைப்பு

2 mins read
79b57e7c-5981-464e-9f4e-c3b29da136d8
ரசிகர்களுக்கு கமல் நன்றி தெரிவித்துக் கொண்டார். படம்: இந்திய ஊடகம் -

சென்னை: நடி­கர் கமல்ஹாசன் பிறந்த நாளான நேற்று ஏரா­ள­மான ரசி­கர்­கள் அவ­ரது வீட்டிற்கு முன்பு திரண்­ட­னர்.

மக்­கள் நீதி மய்ய கட்­சி­யின் தலை­வ­ரும் உலக நாய­கன் என்று ரசி­கர்­க­ளால் அழைக்­கப்­ப­டு­ப­வ­ரு­மான கமல் நேற்று தனது 66வது (நவம்­பர் 7) பிறந்த நாளைக் கொண்­டா­டி­னர். அவ­ருக்கு வாழ்த்து தெரி­விப்­ப­தற்­காக நேற்று காலை­யி­லேயே ஆயி­ரக்­க­ணக்­கான ரசி­கர்­களும் கட்­சித் தொண்­டர்­களும் சென்னை எல்­டாம்ஸ் ரோடு முனை­யில் உள்ள அவ­ரது வீட்­டுக்கு முன்பு திரண்­ட­னர். இது­வரை இல்­லாத அளவுக்கு பெருங்­கூட்­டம் கூடி­யது.

திறந்த வேனில் நின்­ற­படி ரசி­கர்­க­ளை­யும் தொண்­டர்­க­ளை­யும் கமல்­ஹா­சன் சந்­தித்­தார். அப்­போது அவரை அனை­வ­ரும் வாழ்த்­தி­னர். தொண்­டர்­கள், 'வருங்­கால முதல்­வரே' என்­று முழக்­க­மிட்­ட­னர்.

அனை­வ­ரின் வாழ்த்­து­க­ளை­யும் கமல்­ஹா­சன் கைகூப்பி ஏற்­றுக் கொண்­டார். 'கமலின் வீட்டு முன்பு தலை நிமிரட்டும் தமிழகம்' என்ற வாசகத்துடன் பெரிய பதாகை வைக்கப்பட்டிருந்தது.

பின்­னர் வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில் ரசி­கர்­க­ளுக்­கும் தொண்­டர்­க­ளுக்­கும் அவர் நன்றி தெரி­வித்­துக் கொண்­டார்.

"என் நேசத்­துக்­கு­ரி­ய­வர்­களே! துணிந்­த­பின் நான் தயங்­கு­வ தில்லை. தடை­கள் கண்டு மயங்க­வில்லை. எதிர்ப்­பு­கள் கண்டு கலங்கு­வ­தில்லை. மக்­கள் நலனே என் வாழ்க்­கை­யின் நோக்கு. தமி­ழ­கத்தை சீர­மைப்­பதே நம் இலக்கு. நற்­பணி என்ற சொல்­லையே நாற்பது ஆண்­டு­க­ளுக்கு முன் தமிழ் சினிமா ரசி­கர்­க­ளுக்கு அறி­மு­கம் செய்­த­வன் நான். எனது பிறந்­த­நாளை நற்­பணி தின­மாக நினைத்து மக்­க­ளுக்கு நற்­கா­ரி­யங்­களை செய்­யுங்­கள்.

கொரோ­னா­வால் பலர் வாழ்­வா­தா­ரம் இழந்­துள்­ள­னர். தெருக்­ கோடிக்கு சென்­றால் கோடி பிரச்­னை­கள் காத்­துக் கிடக்­கின்­றன. தேடித் தீர்ப்­போம் வா நற்­பணி செய்ய, தேர்­த­லில் வென்று ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்றி தமி­ழ­கத்தைச் சீர­மைக்­கும் முன்­னோட்­ட­மாக நமது காரி­யங்­கள் எனது பிறந்­த­நா­ளில் துவங்­கட்­டும்," என்று அறிக்­கை­யில் கமல்­ஹா­சன் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இதற்­கி­டையே திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லின் வெளி­யிட்ட டுவிட்டர் பதி­வில் கமல்­ஹா­ச­னுக்கு வாழ்த்து தெரி­வித்­துள்­ளார்.

"முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரால் 'கலை­ஞானி' என்று போற்­றப்­பட்ட -எனது நெஞ்­சம் நிறைந்த அன்­புக்கு உரிய நண்­பர் கமல்­ஹா­சன் அவர்களுக்கு என் இனிய பிறந்­த­நாள் நல்­வாழ்த்­து­கள்! நல­மு­டன் நீண்ட காலம் வாழ்க!," என்று மு.க. ஸ்டா­லின் குறிப்­பிட்­டு உள்­ளார்.

காங்­கி­ரஸ் கட்­சி­யின் முன்­னாள் தலை­வ­ரான நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ராகுல் காந்தி, நவீன தமிழ் கலா­சா­ரத்­திற்கு பங்­க­ளித்த வலு­வான குரல் என்று கமல்­ஹா­ச­னுக்கு பிறந்­த­நாள் வாழ்த்­து­கள் தெரி­வித்­துள்­ளார்.