உலக பட்டியலில் 100 பேருக்கும் அதிக தமிழக விஞ்ஞானிகள்

உலக பட்டியலில் 100 பேருக்கும் அதிக தமிழக விஞ்ஞானிகள்

1 mins read

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வின் ஸ்டான்­ஃபோர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­தால் தொகுக்­கப்­பட்ட உல­கின் சிறந்த விஞ்­ஞா­னி­க­ளின் பட்­டியலில் தமிழ்­நாட்­டைச் சேர்ந்த நூற்­றுக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் இடம்­பெற்­றுள்­ள­னர்.

மொத்­தம் 21 துறை­களில் பணி­யாற்­றும் சுமார் ஒரு லட்­சம் சிறந்த விஞ்­ஞா­னி­க­ளைக் கொண்ட அந்தப் பட்­டி­ய­லில் இந்­தி­யா­வைச் சேர்ந்த 1,594 மருத்­து­வர்­களும் அறி­வி­யல் அறி­ஞர்­களும் இடம் பெற்­றுள்­ள­னர்.

அந்தப் பட்­டி­யல் குறித்த அறிக்கை 'ப்ளோஸ் பயோ­லஜி' என்ற இத­ழில் வெளி­யி­டப்­பட்­டது. தலை­சி­றந்த விஞ்­ஞா­னி­கள் பட்­டி­ய­லில் 36 பேரா­சி­ரி­யர்­க­ளு­டன் சென்னை ஐஐடி கல்வி நிலை­யம் முன்­னிலை வகிக்­கிறது.

திருச்சி என்ஐடியின் ஏழு அறி­ஞர்­கள் அப்­பட்­டி­ய­லில் இடம் பெற்­றுள்­ள­னர்.

அண்­ணா­மலை பல்­க­லைக்­கழகத்­தைச் சேர்ந்த ஒன்­பது பேர் பார­தி­யார் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த எட்டு பேர் பட்­டி­ய­லில் உள்­ள­னர்.

தமி­ழக மத்­திய பல்­க­லைக்­க­ழ­கம், மதுரை காம­ராஜ் பல்­க­லைக்­க­ழ­கம், மனோன்­ம­ணி­யம் சுந்­த­ர­னார் பல்­க­லைக்­க­ழ­கம், அழ­கப்பா பல்­க­லைக்­க­ழ­கம் மற்­றும் பார­தி­தா­சன் பல்­க­லைக்­க­ழ­கம் ஆகிய நிறு­வ­னங்­க­ளி­லி­ருந்து தலா இரண்டு பேரும்;

பெரி­யார், அண்ணா மற்றும் சென்னை பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து தலா ஒரு­வரும் அந்தப் பட்­டி­ய­லில் இடம் பெற்­றுள்­ள­னர்.