கரூர்: தமிழ்நாட்டில் கொவிட்-19 இன்னமும் ஒடுங்கவில்லை என்றாலும் பேருந்துகள் இயங்குகின்றன.
கரூரில் இருந்து கோயம்புத்தூர் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தில் கொரோனா மாத்திரை என்று கூறி ஒரு பயணியிடம் வெறும் மிட்டாயைக் கொடுத்து கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.
பேருந்தில் செல்வராஜ், 41, என்ற பயணி ஓர் ஆடவரை நம்பி அவர் கொடுத்த கொரோனா மருந்தைச் சாப்பிட்டார்.
அதைச் சாப்பிட்டதும் கொஞ்சம் மயங்கிவிட்டார். இந்த நிலையில் அந்த மர்ம நபர் ரூ. 20,000 பணம், ஏடிஎம் கார்டு, மோதிரம் ஆகியவற்றை செல்வராஜிடம் கொள்ளை அடித்துவிட்டார். பிறகு போலிசிடம் செல்வராஜ் புகார் தெரிவித்ததாகத் தகவல்கள் கூறின.

