சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு மே மாதம் நடக்க உள்ள நிலையில், அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளுக்குள் சூடு பறக்கும் கருத்து மோதல்களும் வாக்குவாதங்களும் வெடித்து வருகின்றன.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ள தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "தமிழ கத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் வாக்களிப்பார்கள்," என்று தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது பாஜக. இதே கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் தொடர வாய்ப்புள்ளதாக கூறும் முருகன், "தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும். பாஜக ஆதரவின்றி எந்தக் கட்சியும் ஆட்சி யமைக்க முடியாது," என்றும் கூறிவருகிறார். அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டும் இருந்துள்ளதே தவிர ஆட்சி அமைய வாய்ப்பில்லை என்றே திமுக, அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

