திரைப்படம் எடுத்த ஆடு திருடர்கள் இருவர் கைது; இருவரும் நடிகர்களாம்

திரைப்படம் எடுத்த ஆடு திருடர்கள் இருவர் கைது; இருவரும் நடிகர்களாம்

1 mins read
72c83879-e2bc-411c-8561-242e250a2126
படம்: ஊடகம் -

சென்னை: எப்­போ­தும் மிடுக்­கான உடையுடன் காணப்­படும் இரு சகோ­த­ரர்­கள் ஆடு திரு­டர்­கள் என்­ப­தும் அவர்­கள் 'நீதான் ராஜா' என்ற திரைப்­ப­டத்­தை­ தயா­ரித்­துள்­ள­தும் தெரியவந்­துள்­ளது.

விசா­ர­ணைக்குப் பின்­னர் இரு­வ­ரை­யும் கைது செய்து புழல் சிறை­யில் அடைத்த போலி­சார், அவர்­க­ளி­டம் இருந்த ஒரு காரை­யும் சிறிய வேனை­யும் பறி­மு­தல் செய்தனர்.

இந்தச் சகோ­த­ரர்­கள், சாலை களில் படுத்­தி­ருக்­கும் ஆடு­களைக் கடத்தி அவற்றை விற்று அதில் கிைடக்­கும் பணத்தை வட்­டிக்­கும் விட்­டுச் சம்­பா­தித்­துள்­ள­னர். இந்த சம்­பாத்­தி­யத்­தில் 'நீதான் ராஜா' என்ற திரைப்­ப­டம் ஒன்­றை­யும் அவர்கள் தயா­ரித்­துள்­ள­னர்.

சென்னை மாத­வ­ரத்தை அடுத்த மஞ்­சம்­பாக்­கம் பகு­தி­யில் ஆடு­கள் வளர்த்து வரும் பழனி ​என்­ப­வர், திடீ­ரென ஓர் ஆடு மாய­மா­னதை அடுத்து கடந்த மாதம் மாத­வ­ரம் காவல்­ நி­லை­யத்­தில் புகா­ர­ளித்­தார்.

உட­ன­டி­யாக அப்பகுதியில் இருந்த சிசி­டிவி காட்சிகளை ஆய்வு செய்த போலி­சார், காரில் வந்த இரு­வர், சாலை­யில் படுத்­தி­ருந்த ஆட்டை லாவ­க­மாக பிடித்­துச் செல்­வது தெரியவந்­தது.

மிடுக்­காக ஆடை அணிந்தி ருந்­த­வர்­களைப் பிடித்து போலி­சார் விசா­ரித்­த­தில், பழைய வண்­ணா­ரப்­பேட்­டை­, ஆண்­டி­யப்­பன் தெரு­வைச் சேர்ந்த நிரஞ்­ஜன், லெனின்­கு­மார் என்பதும் அவர் கள் பழ­னி­யின் ஆட்டை திரு­டி­யதையும் ஒப்­புக்­கொண்­ட­னர்.