ஆண்டிப்பட்டி: பொதுவாக தென்னை மரங்கள் நெடுநெடு வென்று உயர்ந்து வளரும். இப்போது, நமது கைகளால் பறிக்கும் அளவுக்கு குட்டை தென்னை மரங்களிலும் தேங்காய்கள் காய்த்துக் குலுங்குகின்றன.
தென்னைமரத்துக்கு கிைள யில்லை என்பது பால பாடம். ஆனால், ஆண்டிப்பட்டி அருகே நான்கு கிளைகளிலும் தேங்காயுடன் காணப்படும் அதிசய தென்னையை மக்கள் பலரும் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கரட்டுபட்டியைச் சேர்ந்தவர் தவச்செல்வம். விவசாயி யான இவரது தென்னந்தோப்பில் ஏராளமான மரங்கள் உள்ளன. அவற்றில் ஒரு தென்னை மரம் மட்டும் குறிப்பிட்ட உயரத்திற்கு வளர்ந்து நான்கு கிளைகளாகப் பிரிந்துள்ளது. அத்துடன், இதை சிலர் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து "அதிசய தென்னை," என்று பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயி தவச் செல்வம் கூறுகையில், "பொதுவாக ஒருசில மரங்கள் வளைந்து, வளைந்து வளரும். இன்னும் சில மரங்கள் குறுக்குவாக்கில் சென்று காய் காய்க்கும். சில மரங்களில் இரு கிளைகள் இருப்பதைப் பார்த்துள்ளோம். ஆனால், நான்கு கிளைகளைக் கொண்ட தென்னையைப் பார்த்து பலரும் வியந்தனர். கிளைகள் பிரிந்ததை பார்க்கும்போது மரமே சூலாயுதம் போன்று உள்ளது. இந்த மரத்தை நாங்கள் சாமியாக வணங்கி வருகிறோம். இது மூடநம்பிக்கை அல்ல என்பது நிச்சயம்," என்றார்.
ஆண்டிப்பட்டி அருகே நான்கு கிளைகளைக் கொண்ட அதிசய தென்னையை பொதுமக்கள் பலரும் வியந்து பார்த்து செல்கின்றனர். அந்த நான்கு கிளைகளிலும் தேங்காய் களும் காய்த்துள்ளது வியப்ைபக் கூட்டி உள்ளது.

