தமிழகத்தில் அருங்காட்சியகம், திரையரங்குகள் திறப்பு

தமிழகத்தில் அருங்காட்சியகம், திரையரங்குகள் திறப்பு

2 mins read
933b4e66-e7f7-4374-b6af-71d2886b95d4
-

தமி­ழ­கத்­தில் உள்ள அைனத்துத் திரை­ய­ரங்­கு­களும் அருங்­காட்­சி­ய­கங்­களும் எட்டு மாதங்­க­ளுக்­குப் பிறகு இன்று செவ்­வாய்க்­கி­ழமை முதல் மீண்டும் செயல்­ப­டு­வ­தற்கு தமி­ழக அரசு அனு­மதி அளித்­துள்­ளது.

அத்­து­டன், பொழு­து­போக்­குப் பூங்­காக்­கள், பெரிய அரங்­கு­கள், கூட்­டம் நடத்­தப்­படும் கூடங்­கள், உயி­ரி­யல் பூங்­காக்­கள் உள்­ளிட்ட பலவும் இன்­று ­மு­தல் பொது­மக்­களின் பயன்­பாட்­டிற்குத் திறந்­து­ விடப்படுகின்றன.

இத்தரு­ணத்­தில் தீபா­வளி விடு­மு­றை­யும் இணைந்து வருவதால் ­மக்­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.

கொரோனா கிரு­மித் தாக்­கத்­தில் இருந்து மாநில மக்­க­ளைப் பாது­காக்­கும் வித­மாக, கடந்த மாா்ச் மாதம் முதல் ஊரடங்கு நடப்­பில் இருந்து வரு­கிறது.

இதைத்­தொ­டா்ந்து, திரை அரங்­கு­கள், பூங்­காக்­கள் உள்­ளிட்ட அனைத்­தும் மூடப்­பட்­டன.

கடந்த செப்­டம்­பர் மாதத்­தில் இருந்து இந்த ஊர­டங்கு கட்­டுப் பாடு­கள் படிப்­ப­டி­யா­கத் தளர்த்­தப்­பட்டு வரு­கின்­றன.

தமி­ழ­கத்­தில் மொத்­தம் 997 திரை­ய­ரங்­கு­கள் உள்­ளன. இவற் றில் ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக ஏறக் குறைய 300 தமிழ்த் திரைப்படங்­கள் வெளி­யி­டப்­ப­ட்டு வந்தன.

இந்நிலையில், இந்த திரையரங்கு கள் மூடப்பட்டதால் பெரும் இழப் பைச் சந்தித்து வந்த பல்வேறு தரப்பினரும் இப்போதுதான் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இருப்பினும், 50% இருக்­கை­களை மட்­டுமே பயன்ப­டுத்தும்படி அனு­ம­தி வழங்கப்பட்­டுள்­ளது.

இதற்கிடையே, வி.பி.எஃப். கட்­ட­ணம் கட்டமாட்­டோம் என்று தயா­ரிப்­பா­ளர்­கள் போர்க்­கொடி உயர்த்தி உள்ளதால் புதுப்­பட வெளியீட்டில் சிக்­கல் ஏற்­பட்­டுள்­ளது.

இதையடுத்து, மீண்­டும் தயா­ரிப்­பா­ளர்­கள் - திரை­ய­ரங்கு உரி­மை­யா­ளர்­கள் இடையே பேச்சு­வார்த்தை தொடங்­கி­யது. இதிலும் இன்னும் எந்­த­வொரு முடி­வும் எட்­டப்­ப­ட­ாமல் உள்ளது.

இத­ன் காரணமாக, இந்த ஆண்டு தொடக்­கத்­தில் வெளி­யாகி வெற்றிபெற்ற படங்­களான 'கண்­ணும் கண்ணு​ம் கொள்­ளை­ய­டித்­தால்', 'ஓ மை கட­வுளே' உள்­ளிட்ட படங்களை மீண்­டும் வெளி­யிடு வதற்கு திரை­ய­ரங்கு உரி­மை­யாளர்­கள் முடிவு செய்­துள்­ள­னர்.

சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள வெண்கல காட்சிக் கூடம். இந்தக் காட்சியகத்தில் உலகின் மிகச்சிறந்த வெண்கலத் தொகுப்புகள் இடம்ெபற்றுள்ளன. படம்: ஊடகம்