செய்தியாளர் கொலைை: அரசியல் தலைவர்கள் சாடல், பத்திரிகையாளர்கள் கண்டனம்

செய்தியாளர் கொலைை: அரசியல் தலைவர்கள் சாடல், பத்திரிகையாளர்கள் கண்டனம்

2 mins read
82acccb8-30a1-4b51-adfc-a374162e6872
உயிரிழந்த பத்திரிகையாளர் மோசஸ். படம்: ஊடகம் -

தமி­ழன் தொலைக் காட்சி செய்­தி­யா­ளர் மோசஸ், 28, மாநி­லத்­தில் நடக்­கும் சட்ட விரோ­தச் செயல்­க­ளைப் புட்­டு­புட்டு வைத்த­தால் கும்­பல் ஒன்று அவரை வெட்­டிப் படு­கொலை செய்­தது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக விக்­னேஷ், மனோஜ், ஆதி ஆகிய மூவர் கைதாகி உள்­ள­னர். அத்து டன், தலை­ம­றை­வாக உள்ள கஞ்சா வியா­பாரி நவ­மணி என்­ப­வ­ரை­யும் போலி­சார் தேடி வரு­கின்­ற­னர்.

இந்த அதிர்ச்­சி­யூட்­டும் படு கொலைச் சம்­ப­வத்தை சென்னை பத்­தி­ரி­கை­யா­ளர் மன்­றம் வன்மை யாகக் கண்­டித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக, இந்த மன்­றத் தின் இணைச் செய­லா­ளர் பாரதி தமி­ழன் வெளி­யிட்­டுள்ள அறிக்கை யில், "செய்­தியை வெளி­யிட்­ட­தற் காகப் படு­கொலை எனில், தமி­ழ­கத்தில் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளின் பாதுகாப்பு அந்த அளவுக்கு மோச­மான நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது என்பதைத் தெரிந்­துெ­காள்­ள­லாம்.

"தமி­ழன் தொலைக்­காட்­சி­யில் ஒளி­ப­ரப்­பா­கும் 'சிறப்­புப் பார்வை' எனும் நிகழ்ச்­சி­யில் நில அப­க­ரிப்பு, கஞ்சா விற்­பனை உள்­ளிட்ட சமூக விரோ­தச் செயல்­களை வெளிச்­சம் போட்­டுக் காட்­டிய ஒரே கார­ணத் துக்­காக சமூக விரோ­தி­கள் மோசசை கொலை செய்­துள்ளனர்.

"உள்­து­றை­யை தன்­வ­சம் வைத்­தி­ருக்­கும் முதல்­வர் இந்த விவ­கா­ரத்­தில் தலை­யிட்டு, சமூக விரோ­தக் கும்­பல்­களை இரும்­புக்­கரம் கொண்டு அடக்­க­ உத்­தரவிட வேண்­டும். பத்­தி­ரி­கை­யா­ளர் பாதுகாப்­புச் சட்­டம் இயற்­றப்­பட வேண்­டும். மோசஸ் குடும்­பத்­திற்கு தமிழக அர­சின் சார்­பில் இழப்­பீடு வழங்­க­வேண்­டும்," என பாரதி தமிழன் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், நல்­லூர் கிரா­மத்­தைச் சேர்ந்த மோசஸ் படுகொலைக்கு அர­சி­யல் தலை­வர்கள் பலரும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

"பத்­தி­ரி­கை­யா­ளர்­கள், ஊட­கத் தின­ரின் உயிர் பறிக்­கப்­ப­டு­வ­தைக் கண்­டும் காணா­ம­லும் இருப்­பது ஜன­நா­ய­கத்­தின் மீது விழு­கின்ற சம்­மட்டி அடி," என்று திமுக தலை­வர் மு.க. ஸ்டா­லின் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.

"குற்­ற­வா­ளி­க­ளைக் குண்­டர் சட்­டத்­தில் கைது­செய்ய வேண்­டும்," என்று வலி­யு­றுத்தி உள்ள விடு­தலை சிறுத்­தை­கள் கட்­சித் தலை­வர் தொல்.திரு­மா­வ­ள­வன், மோசஸ் குடும்­பத்­திற்கு ரூ.50 லட்­சம் நிதி­யு­தவி வழங்கவேண்­டும் என்று கோரி­யுள்­ளார்.

மோச­சின் உயி­ருக்கு அச்­சு­றுத் தல் இருப்­ப­தாக காவல்­து­றை­யில் அவ­ரது தந்தை முன்பே புகாரளித்­தும் தக்க நட­வ­டிக்கை எடுக்கா மல் காவல்­துறை அலட்­சி­யம் காட்டி யதன் விளை­வா­கவே ஓர் உயிர் அநி­யா­ய­மாகப் போயுள்­ள­தாக நாம் தமி­ழர் கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் சீமான் தெரி­வித்­துள்­ளார்.

விஜ­ய­காந்த் அறிக்­கை­யில், "மக்­கள் பிரச்­சி­னை­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்கும் தொலைக்­காட்சி செய்­தி­யா­ளர்­க­ளுக்கே இந்த நிலை என்­றால் சரா­சரி மக்­க­ளின் நிலை என்ன? இதுபோன்ற நிலையைத் தடுக்க தமி­ழக அரசு கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என்று வலி­யு­றுத்தி உள்­ளார்.

நில அபகரிப்பு குறித்த சில தகவல்களை என் மகன் தொலைக்காட்சியில் அம்பலப்படுத்தினார். அதிலிருந்து சிக்கல்கள் எங்களைத் துரத்த ஆரம்பித்தன. அதே கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதையும் மோசஸ் சுட்டிக்காட்டியதால் கொல்லப்பட்டுள்ளார்.