படையாகத் தாக்கும் புழுக்கள்; ஆளில்லா விமானத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு

படையாகத் தாக்கும் புழுக்கள்; ஆளில்லா விமானத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு

2 mins read
0e4f1eca-5d92-4ef0-9fa9-b06298d7ec32
-

சோளப் பயிர்­களைக் கூட்டம் கூட்டமாக அழித்­துத் தாக்­கும் ­பு­ழுக்­களை ஆளில்லா விமானங்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்து அழிப்பதற்கு ஆய்­வா­ளர்­கள் ஆராய்ச்­சி­களை மேற்ெகாண்டு வரு­கின்­ற­னர்.

பயிர்கள் முழு­வ­துமாக புழுக்­கள் சூழ்ந்­துள்­ள­தால் அவற்றை மாடு­களுக்குத் தீவ­ன­மா­கப் போடமுடியாத சூழலும் உள்ளது. மக்காச்சோள வயல்களை முற்­றி­லும் அழிப்­பது, தீயிட்டு எரிப்­ப­தைத் தவிர வேறு வழி­யில்லை என்­றும் கூறப்­படு­கிறது.

இந்­நி­லை­யில், மக்­காச்­சோ­ளம் பயி­ரி­டப்­பட்­டுள்ள வயல்­களின்­மீது ஆளில்லா விமா­னத்தைப் பறக்­க­விட்டு, அதன்மூலம் பூச்­சிக்கொல்லி மருந்­தைத் தெளித்து புழுக்­களை ஒட்­டு­மொத்தமாக அழிக்கமுடி­யுமா என்­ப­தை வேளாண் விஞ்­ஞா­னி­கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து பூச்சி­யியல் துறை பேரா­சி­ரி­யர்­க­ள் கூறியபோது, "மக்­காச்சோளத்தை படை படையாக ­புழுக்கள் தாக்­குவது பெரும் பிரச்­சினை­யாக உருவெடுத்துள்ளது. அதைக் கட்டுப்­ப­டுத்­தும் பணியில் புதிய தொழில்­நுட்­ப­மான ஆளில்லா விமா­னம் மூலம் மருந்து தெளிப்பது குறித்து ஆய்வு செய்­து­வ­ரு­கி­றோம்.

"இதன்­மூ­லம் புழுக்களை அழித்து கட்டுக்குள் கொண்டுவரும் திறன், பயிர்களில் எஞ்­சியுள்ள நச்­சுத் தன்மை, புழுக்­களின் இறப்பு விகி­தம், நன்மை தரும் பூச்சி­களின் எண்­ணிக்கை போன்­ற­வற்றின் சாதக பாதகங்­க­ளையும் கண்­ட­றி­ய முயன்று வருகிறோம். இந்த ஆராய்ச்சி திரு­வண்­ணா­மலை மாவட்­டத்­தில் நடப்­பது இதுவே முதல்­முறை,'' என்­று கூறியுள்ளனர்.

மக்காச்சோளத்தை அழிக்கும் புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்த திருவண்ணாமலை வேளாண் கல்லூரி ஆய்வாளர்கள் புதுமுயற்சியில் இறங்கியுள்ளனர். சோளம் பயிரிடப்பட்டுள்ள வயல்வெளிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிப்பதன் மூலம் பயன் கிடைக்குமா என்பதைக் கண்டறியும் பணியில் வேளாண் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். படம்: தமிழக ஊடகம்