பெரம்பலூர் அருகே இரூர், சத்திரமனை, மங்கூன் ஆகிய பகுதிகளில் இருந்த கோழிப்பண்ைண களில் மொத்தம் 2,000 டன் வெங்காயம் பதுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் மீது கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரும் வருவாய்த்துறை அதிகாரி களும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பதுக்கப்பட்ட வெங்காயம் அழுகி இருப்பதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இவற்றை வழங்கமுடியாது என்றும் அவற்றை குழிதோண்டி புதைக்கும்படியும் வெங்காயத்தை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

