பெருமாபாளையம் கிராமவாசிகள் பெருமிதம்; சர்ச்சைக்கும் பஞ்சமில்லை

பெருமாபாளையம் கிராமவாசிகள் பெருமிதம்; சர்ச்சைக்கும் பஞ்சமில்லை

2 mins read
9ec47188-0ef0-4735-b955-5fcec28e528f
தமிழகத்தைச் சேர்ந்த தம் உறவினர்களுடன் மருத்துவர் செலின் கவுண்டரும் (இடமிருந்து 3வது) அவருடைய கணவர் கிரான்ட் வாஹ்லும். படம்: டுவிட்டர்/செலின் கவுண்டர் -

அமெ­ரிக்­கத் துணை அதி­ப­ராக திரு­வாட்டி கமலா ஹாரிஸ் தேர்­வு­பெற்­றுள்­ளதை அடுத்து அவ­ரது பூர்­வீக கிரா­ம­மான திரு­வா­ரூர் மாவட்­டம், துள­சேந்­தி­ர­பு­ரம் கொண்­டாடி வரு­கிறது.

அதே­போல, ஈரோடு மாவட்­டம், பெரு­மா­பா­ளை­யம் கிரா­ம­வா­சி­களின் முகங்­க­ளி­லும் கடந்த சில நாள்­க­ளாக பெரு­மி­தம் தாண்­ட­வ­மாடி வரு­கிறது. அவ்­வூ­ரைப் பூர்­வீ­க­மா­கக் கொண்ட மருத்­து­வர் செலின் கவுண்­டர், 43, அதி­பர் தேர்­த­லில் வென்ற ஜோ பைடன் அமைத்­துள்ள கொரோனா தடுப்பு வழி­காட்­டுக் குழு­வில் இடம்­பெற்­றுள்­ளதே அதற்­குக் கார­ணம்.

மருத்­து­வர் செலின் நியூ­யார்க் பல்­க­லைக்­க­ழக மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் துணைப் பேரா­சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார். அவ­ரின் தந்தை ராஜ் நட­ரா­ஜன் கவுண்­டர் பெரு­மா­பா­ளை­யத்­தைச் சேர்ந்­த­வர். அவர் 1960களில் அமெ­ரிக்­கா­விற்­குக் குடி­பெ­யர்ந்­து­விட்­டார்.

தமது நிய­ம­னம் குறித்து இந்­தி­யப் பத்­தி­ரி­கை­கள் வெளி­யிட்­டு உள்ள செய்­தி­ப் பக்கங்களைத் தம் டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டுள்ள மருத்­து­வர் செலின், "தமி­ழ­கத்­தில் உள்ள என் மக்­கள் பெரு­மை­யாக உணர்­கின்­ற­னர்," எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"ஏன் இன்­னும் என் பெயர் சாதி­யைத் தாங்கி நிற்­கிறது எனப் பல­ரும் கேட்­கின்­ற­னர். என் தந்தை அமெ­ரிக்­கா­விற்கு வந்­த­போது நட­ரா­ஜன் என்ற அவ­ரது பெயரை உச்­ச­ரிக்க அமெ­ரிக்­கர்­கள் சிர­மப்­பட்­ட­ன­ராம். அத­னால், நான் பிறக்­கும் முன்­னரே அவர் தன் பெயரை கவுண்­டர் என மாற்­றிக்­கொண்­டார். என் பெயர் எனது வர­லாற்­றின் ஒரு பகுதி, எனது அடை­யா­ளம். நான் மண­மு­டித்த பிற­கும் என் பெயரை மாற்­றிக்­கொள்­ள­வில்லை. இப்­போ­தும் அதைச் செய்­ய­மாட்­டேன்," என்று அவர் கூறியுள்­ளார்.

திரு­வாட்டி கமலா ஹாரி­சின் உற­வி­னர்­கள் பல ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே துள­சேந்­தி­ர­பு­ரத்­தை­ விட்டுச் சென்­று­விட்­ட­னர். ஆனால், திரு­வாட்டி செலின் நான்கு முறை பெரு­மா­பா­ளை­யத்­திற்கு வந்து சென்­றுள்­ளார்.

தம் தந்­தை­யின் பெய­ரில் அங்கு ஓர் அறக்­கட்­ட­ளையை நிறுவி, குழந்­தை­க­ளின் கல்­விக்­கும் தம் தந்தை பயின்ற மொடக்­கு­றிச்சி அரசு ஆண்­கள் மேல்­நி­லைப் பள்­ளிக்­கும் உதவி வரு­கி­றார் மருத்­து­வர் செலின். இவருடைய தாயார் பிரான்சைச் சேர்ந்தவர்.

மருத்துவர் செலினின் உறவினர் திரு தங்கவேல் கூறுகையில், "இரு நாள்களாக ஊரே அவரைப் பற்றித் தான் பேசுகிறது. அவரால் எங்கள் குடும்பத்திற்கே பெருமை," என்றார்.

மொடக்­கு­றிச்சி பள்­ளி­யில் நடந்த 72வது இந்­திய சுதந்­திர நாள் நிகழ்ச்­சி­யில் திரு­வாட்டி செலினும் அவ­ரின் கண­வ­ரும் தலைமை விருந்­தி­னர்­க­ளா­கக் கலந்து­கொண்­டதை நினை­வு­கூர்ந்­தார் அப்­பள்­ளி­யின் முன்­னாள் தலை­மை­யா­சி­ரி­யர் ஆவு­டை­யப்­பன்,