அதிசயம்: மூன்று தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி

அதிசயம்: மூன்று தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி

1 mins read
e1747efb-cbbf-48cd-bce1-05204e16a99d
படம்: தமிழக ஊடகம் -

மூன்று தலை­யு­டன் கூடிய கன்றை பசு ஈன்ற சம்­ப­வம் சேலம் மாவட்­டத்­தில் நிகழ்ந்­துள்­ளது.

ஆத்­தூர் அருகே கொச­வன்­காடு பகு­தி­யைச் சேர்ந்­த­வர் மாரி­முத்து. விவ­சா­யி­யான அவர், தமது தோட்­டத்­தில் ஆடு மாடு­க­ளை­யும் வளர்த்து வரு­கி­றார்.

சில நாள்­க­ளுக்­குமுன் மாரி­முத்து வாங்கி வந்த பசு, நேற்­றுக் காலை­யில் ஒரு கன்றை ஈன்­றது. அக்­கன்று மூன்று தலை­யு­டன் இருந்­த­தைக் கண்டு அவர் அதிர்ச்சி ­அடைந்­தார்.

இந்­தத் தக­வல் வேக­மா­கப் பரவ, அக்­கம்­பக்­கத்­தில் இருந்து ஏரா­ள­மா­னோர் வந்து அக்­கன்­றுக்­குட்­டி­யைப் பார்த்­துச் சென்­ற­னர். ஆனா­லும், சிறிது நேரத்­தில் அது இறந்து­விட்­டது.

தக­வ­ல­றிந்து வந்த கால்­நடை மருத்­து­வர்­கள், அந்தக் கன்­றுக்­குட்­டியை மீட்டு, விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.