இரண்டு மணி நேரத்தில் அரசுப் பணி வழங்கி முதல்வர் அசத்தல்

இரண்டு மணி நேரத்தில் அரசுப் பணி வழங்கி முதல்வர் அசத்தல்

1 mins read
33e85152-77f0-426c-be15-bece88c0fc4e
படம்: ஊடகம் -

வேலை கேட்டு மனு அளித்த உடற்­கு­றை­யுள்ள பெண்­ணுக்கு அடுத்த இரண்டு மணி நேரத்­தில் அர­சுப் பணிக்­கான ஆணை வழங்கி அசத்­தி­னார் தமி­ழக முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி.

தூத்­துக்­குடி மருத்­து­வ­ம­னை­யில் நேற்று நவீன கரு­வி­யைத் தொடங்கி வைத்­த­பின் காரில் திரும்­பிக்­கொண்­டி­ருந்­தார் முதல்­வர். அப்­போது, முத்­தை­யா­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த மாரீஸ்­வரி, 20, என்ற உடற்­கு­றை­யுள்ள பெண் கையில் மனு­வு­டன் சாலை­யில் நின்­று­கொண்டு இ­ருந்­தார்.

இதைக் கண்ட முதல்­வர், காரை நிறுத்தி என்ன ஏது­வென்று அப்­பெண்­ணி­டம் விசா­ரித்­தார். அப்­போது, தனக்கு அரசு வேலை வழங்க வேண்­டும் என மாரீஸ்­வரி முதல்­வ­ரி­டம் மனு அளித்­தார்.

மனு­வைப் பெற்­றுக்­கொண்ட முதல்­வர், அடுத்த இரண்டு மணி நேரத்­திற்­குள் சுகா­தா­ரத் துறை மூலம் தூத்­துக்­குடி அரசு மருத்­து­வ­ம­னை­யின் கணி­னிப் பிரி­வில் மாரீஸ்­வ­ரிக்கு வேலை வழங்க உத்­த­ர­விட்­டார். உட­ன­டி­யா­கப் பணி ஆணை­யும் மாரீஸ்­வ­ரி­யி­டம் வழங்­கப்­பட்­டது.

'முதல்­வன்' பட பாணி­யில் முதல்­வர் பழனிசாமி எடுத்த மின்­னல் வேக நட­வடிக்­கை­யைக் கண்டு அதி­மு­க­வி­னர் நெகிழ்ந்­து­போ­ன­தாகக் கூறப்பட்டது.