மூவர் சுட்டுக்கொலை: சென்னையிலிருந்து புனே விரைந்தது போலிஸ் படை

மூவர் சுட்டுக்கொலை: சென்னையிலிருந்து புனே விரைந்தது போலிஸ் படை

2 mins read
87c444f7-7a05-4af1-a941-c37852108df5
கொலைகள் நடைபெற்ற வீட்டில் இங்குமங்கும் ஓடி துப்பறியும் பணியில் ஈடுபட்ட மோப்ப நாய். படம்: தமிழக ஊடகம் -

சென்னை யானை­க­வு­னி­பகுதியில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த மூன்று பேர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தற்­கான கார­ணம் குறித்து பர­ப­ரப்பு தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

ராஜஸ்­தானைச் சேர்ந்த தலில் சந்த், 74, யானை­க­வு­னி­யில் 'பைனான்ஸ்' தொழில் செய்து வந்­தார். புதன்கிழமை இரவு இவரை தொடர்­பு­கொள்ள முடி­யா­த­தால் இவ­ரது மகள் பிங்கி வீட்­டிற்குச் சென்று பார்த்­த­போது தலில் சந்த் அவ­ரது மனைவி புஷ்பா பாய், 70, மற்­றும் மகன் ஷீத்­தல், 42, ஆகி­யோர் கொலை­செய்­யப்­பட்டு சட­ல­மாக கிடந்­த­னர்.

தலில் சந்த் கன்னத்திலும் தாய் புஷ்பா பாய் நெற்­றி­யி­லும் சகோ­த­ரர் ஷீத்­தல் உச்­சம் தலை­யிலும் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டதை கண்டு மகள் பிங்கி அதிர்ச்சியில் உறைந்தார். தக­வல் அறிந்த சென்னை மாந­கரக் காவல் ஆணை­யர் மகேஷ்­கு­மார் அகர்­வால் சம்­பவ இடத்­துக்கு நேரில் சென்று விசா­ரணை நடத்­தி­யுள்­ளார்.

கொலை செய்­யப்­பட்ட ஷீத்­த­லுக்கு­ ம­ண­மாகி இரு குழந்­தை­கள் உள்ள நிலை­யில், மனை­வியைப் பிரிந்து தமது பெற்றோருடன் வாழ்ந்து வந்­தது முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது. ஷீத்தலின் மனைவி ஜெய­மா­லா மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பிள்ளை களுடன் வசித்து வருகிறது. அவருக்கு சொத்தைப் பிரித்துக் கொடுப்­ப­தில் பிரச்­சினை நீடித்து வந்ததும் போலி சுக்குத் தெரியவந்தது.

ஜெய­மா­லா­வின் சகோ­த­ரர்­கள் இரு­வர் ஜீவ­னாம்­ச­மாகபெரும் தொகை யும் சொத்­துகளும் கேட்டு தலில் சந்த் தம்பதியரை நச்சரித்து வந்த தாகக் கூறப்பட்டது.

இதற்­காக கடந்த ஓராண்டு காலத்தில் புனே­யிலிருந்து 10க்கும் மேற்­பட்ட முறை அவ்விருவரும் வந்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­னர். ஆனால் நீதி­மன்­றத்­தில் வழக்கு உள்­ளதை கார­ணம் காட்டி தலில் சந்த் தாம­தப்ப­டுத்தி வந்­தார். கடந்த வாரம் ஜெய­மாலா சகோ­த­ரர்­கள் சென்னை வந்த போது தலில் சந்த், ஷீத்­தல் ஆகி யோருடன் கடும் தக­ரா­ற்றில் ஈடு­பட்­ட­து­டன் எச்­ச­ரித்­து­விட்டும் சென்­றுள்­ள­னர்.

இத­னால் அவர்­கள் இந்தக் கொலை­ச் சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலிசார் சந்­தே­கிக்கின்றனர். அவர்­கள் நேர­டி­யாக கொலை­யில் ஈடுபட்­டார்­களா? அல்­லது கூலிப்­ப­டையை ஏவி கொலை செய்­தார்­களா? என போலிசார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர். குற்­ற­வா­ளி­களைப் பிடிக்க ஐந்து தனிப்­படைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றில் ஒரு தனிப்­படை போலி சார் புனே நகருக்கு விரைந்து சென்றுள்ளனர்.