10, 8 வயதுகளில் இரு மகள்களை கடப்பாரையால் அடித்துக் கொன்ற தந்தை

10, 8 வயதுகளில் இரு மகள்களை கடப்பாரையால் அடித்துக் கொன்ற தந்தை

1 mins read
a57f9cef-c971-41eb-a06c-c8390c0947f0
படம்: தமிழக ஊடகம் -

திரு­வண்­ணா­மலை மாவட்­டம் ராயம்­பேட்­டை­யைச் சேர்ந்­த­வர் முரு­கன், 38. இவ­ரது மனைவி தேவிகா, 27. இவர்­க­ளுக்கு, மீனா, 10, சிவானி, 8 என்ற இரு மகள்­கள் இருந்­த­னர். தேவிகா, ராயம்­பேட்டை ஊராட்சி ஒன்­றிய நடு­நி­லைப் பள்­ளி­யில் துப்­பு­ர­வுப் பணி­யா­ள­ராக இருந்­தார்.

கொரோ­னா­வால் பள்­ளிக்­கூ­டங்­கள் மூடப்­பட்ட நிலை­யில் தேவிகா ஓர் உண­வத்­தில் வேலை செய்­யத்­தொ­டங்­கி­னார். அங்கு வேலைக்குச் சென்ற மனை­வி­யின் நடத்­தை­யில் சந்­தே­க­ம­டைந்த முரு­கன், அவ­ரி­டம் அடிக்­கடி தக­ராறு செய்து வந்­துள்­ளார். பிள்ளைகள் இரண்டும் தமக்குப் பிறந்தவர்கள் இல்லை என கூறி செவ்­வாய்க்­கி­ழமை இரவு 11 மணி­ய­ள­வில் முருகன் தகராறு செய்தார். தொடர்ந்து தமது இரு மகள்களையும் கடப்பாரையால் அவர் தாக்கினார்.

தடுக்க வந்த மனைவி தேவிகாவையும் முருகன் தாக்கினார். சம்­பவ இடத்­தி­லேயே சிறுமி மீனா பலி­யா­னார்.

படு­கா­ய­ம­டைந்த சிவானி திரு­வண்­ணா­மலை அரசு மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லும் வழி­யில் உயி­ரி­ழந்­தார். தேவிகா சிகிச்சை பெற்று வரு­கி­றார். போலி­சா­ரின் விசா­ர­ணைக்குப் பயந்த முரு­கன் விஷம் குடித்து தற்­கொ­லைக்கு முயன்­றார். கைது செய்யப் பட்ட அவ­ரும் அரசு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.