இந்து சமய சிறப்பை விளக்கும் விழா

இந்து சமய சிறப்பை விளக்கும் விழா

2 mins read
c7d23b84-7c5d-4f67-a403-64c05db49404
தீபாராதனை இந்துக்களின் வாழ்க்கையின் ஓர் அங்கம். படம்: சிங்கப்பூர் இந்து மையம் -

இந்து சம­யத்­தின் சிறப்­பி­யல்­பு­க­ளைப் பறை­சாற்­றும் விழா ஒன்றை சிங்­கப்பூர் இந்து மையம் ஏற்று நடத்­து­கிறது. வரும் 20ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை பத்து நாட்­க­ளுக்கு நடை­பெற இருக்­கும் விழா­வில் 23 நிகழ்­வு­கள் இடம்­பெ­றும். சம­யச் சொற்­பொ­ழி­வு­கள், கலா­சார நிகழ்ச்­சி­கள், குழு விவா­தங்­கள், சம­யத்தை மைய­மா­கக் கொண்ட விளை­யாட்­டு­கள் மற்­றும் சுற்­றுப்­ப­ய­ணங்­கள் ஆகி­யன இவற்­றுள் அடங்­கும்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள முக்­கிய இந்து ஆல­யங்­களை மெய்­நி­கர் வழி­யாக சுற்­றிப் பார்ப்­பது விழா­வின் முக்­கிய அம்­சம். சைவ உண­வின் சிறப்­பு­கள் பற்றி சோனல் நிரஞ்­சன், ரேணு சுரேஷ் ஆகிய இரு பெண்­க­ளின் கலந்­து­ரை­யா­ட­லும் விழா­வைச் சிறப்­பிக்­கும்.

இந்­து­வின் வாழ்க்­கையை வாழ்­வது என்­னும் கருப்­பொ­ரு­ளில் இந்து சம­யத்­தின் முக்­கிய அம்­சங்­களை விளக்­கும் ஆன்­மிக, கலா­சார, சமூக, குடும்ப, சுகா­தாரம் முதலிய நிகழ்­வு­க­ளோடு கட்­ட­டக்­க­லையை விவ­ரிக்­கும் அம்­ச­மும் இடம்­பெ­றும்.

இந்து சம­யம் மீதான ஆழ­மான புரி­தலை சிங்­கப்­பூ­ர­ரி­டையே ஏற்­ப­டுத்­து­வ­தும் ஓர் இந்­து­வின் அன்­றாட வாழ்க்­கை­யில் அது பிர­தி­

ப­லிக்­கும் விதத்தை விளக்­கு­வ­தும் விழா­வின் நோக்­கம் என்று சிங்­கப்­பூர் இந்து மையத்­தின் ஆலோ­ச­கர் திரு என்.வர­பி­ர­சாத் தெரி­வித்­தார்.

இந்து சம­யம் என்­பது பெரிய ஆல­ம­ரம் போன்­றது. பல்­வேறு வேர்­க­ளை­யும் கிளை­க­ளை­யும் கொண்­டது அது என்­ப­தால் தவ­றான புரி­த­லுக்­கும் அங்கு இட­முண்டு. அந்­தப் புரி­த­லைக் களைந்து இந்து சம­யத்­தின் சிறப்புத்­ தன்­மை­களை சிங்­கப்­பூ­ரர்கள், இந்­துக்­கள், இந்­துக்­கள் அல்­லா­தோர் ஆகி­யோ­ரி­டம் விளக்­கு­வ­தும் மாநாட்­டின் பணி­யாக இருக்­கும் என்­றார் அவர்.

விழாவை வரும் வெள்­ளிக்­

கி­ழமை (நவம்பர் 20) இரவு 7 மணிக்கு கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் தொடங்கி வைக்­கி­றார். விழா நிகழ்­வு­கள் www.facebook.com/hinducentresg, www.youtube.com/hinducentresg ஆகிய சமூக ஊட­கத்­த­ளங்­களில் நேர­லை­யாக இடம்­பெ­றும். விழா நிகழ்­வு­கள் பற்­றிய விவ­ரங்­களை www.sfh.sg இணை­யத்­த­ளத்­தில் காண­லாம்.