சாத்தான்குளம்: 105 சாட்சிகள்

சாத்தான்குளம்: 105 சாட்சிகள்

2 mins read

மதுரை: கடந்த ஜூன் 19ஆம் தேதி தூத்­துக்­குடி மாவட்­டம் சாத்­தான்­குள வியா­பா­ரி­கள் ஜெய­ரா­ஜும் அவ­ரு­டைய மகன் பென்­னிக்­ஸும் சாத்­தான்­கு­ளம் போலி­சா­ரால் விசா­ர­ணைக்கு அழைத்து செல்­லப்­பட்டு தாக்­கப்­பட்­ட­னர்.

பின்­னர் கோவில்­பட்டி கிளை சிறை­யில் அடைக்­கப்­பட்ட அவர்­கள் இரு­வ­ரும் அடுத்­த­டுத்து உயி­ரி­ழந்­த­னர்.

இது­கு­றித்து உயர் நீதி­மன்ற மது­ரைக் கிளை உத்­த­ர­வின்­பே­ரில், விசா­ரணை நடத்­திய சிபி­சி­ஐடி போலி­சார், ஆய்­வா­ளர் ஸ்ரீதர் உள்­பட 10 காவ­லர்­களை கைது செய்து அவர்­கள் மீது கொலை வழக்­குப்­

ப­திவு செய்­த­னர்.

இத­னை­ய­டுத்து தற்­போது இந்த வழக்கை சிபிஐ அதி­கா­ரி­கள் விசா­ரித்து வரு­கின்­ற­னர். இந்த வழக்­கில் கைதான போலிஸ் சிறப்பு உதவி ஆய்­வா­ளர் பால்­துரை கொரோ­னா­வால் இறந்­த­தால் மற்ற ஒன்பது பேர் மீதான விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.

தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்­பாக சிபிஐ அதி­கா­ரி­கள் அவ்­வப்­போது சாத்­தான்­கு­ளத்­துக்­கும் கோவில்­பட்­டிக்­கும் சென்று விசா­ரணை நடத்­தி­னர்.

இத­னைத் தொடர்ந்து இந்த வழக்­கில் சிபிஐ 2,027 பக்­கங்­கள் கொண்ட குற்­றப்­பத்­தி­ரி­கையை தாக்­கல் செய்­துள்­ளது. அதன்­படி இந்த கொலை வழக்­கில் காவ­லர்­கள், மருத்­து­வர்­கள் உள்­பட 105 சாட்­சி­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சாத்­தான்­கு­ளம் காவல்­நி­லைய தலைமை காவ­லர் பியூலா, ரேவதி உள்­ளிட்ட ஆறு போலி­சார் சாட்­சி­க­ளாக சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். மேலும் கோவில்­பட்டி கிளை சிறை கண்­கா­ணிப்­பா­ளர், மருத்­து­வர்­கள், செவி­லி­யர்­கள் உள்­ளிட்­டோ­ரும் இதில் சாட்­சி­க­ளாக சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

அதே­போல், நீதி­பதி பார­தி­தா­ச­னின் விசா­ரணை அறிக்­கை­யும் டெல்­லி­யில் உள்ள தட­ய­வி­யல் ஆய்வு மையத்­தின் அறிக்­கை­யும் குற்­றப்­பத்­தி­ரி­கை­யில் இடம்­பெற்­றுள்­ளன.

இதுதவிர ஜெய­ராஜ்-பென் னிக்ஸ் குடும்­பத்­தி­னர், நண்­பர்­கள், வழக்­க­றி­ஞர்­கள் உள்­ளிட்­டோ­ரி­ட­மும் விசா­ரணை நடத்­தப்­பட்­டி­ருப்­பது குற்­றப்­பத்­தி­ரி­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. சிறப்பு நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட்­டுள்ள இந்த வழக்கு விசா­ரணை டிசம்­பர் 10ஆம் தேதி தொடங்­கும் எனத் தெரி­ய­வந்­துள்­ளது.