மூவரை கொல்ல மருமகள் ஏற்பாடு: கொலையாளிகள் சிக்கினர்

மூவரை கொல்ல மருமகள் ஏற்பாடு: கொலையாளிகள் சிக்கினர்

2 mins read

சென்னை: சென்னை யானைக்

­க­வுனி பகு­தி­யில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த மூன்று பேர் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­தில் அந்­தக் குடும்­பத்­தைச் சேர்ந்த ஒரு பெண்ணே கொலை­காரர்களை ஏவி­விட்­ட­தாக போலிசார் தெரிவித் துள்ளனர்.

சென்­னை­யில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த தலில் சந்த், 74, அவ­ரது மனைவி புஷ்பா பாய், 70, அவர்­க­ளின் மகன் ஷீத்­தல், 42, ஆகி­யோர் புதன்­கி­ழமை இரவு அவர்­க­ளின் வீட்­டுக்­குள் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­னர்.

மக்­கள் நட­மாட்­டம் மிகுந்த இடத்­தில் நடை­பெற்ற இந்­தக் கொலைச் சம்­ப­வம் யானைக்­க­வுனி வட்­டா­ரத்­தில் பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது. கொலை­யா­ளி­க­ளைப் பிடிக்க ஐந்து தனிப்­ப­டையை போலிஸ் தலைமை அமைத்து தீவிர தேடு­த­லில் இறங்­கி­யது. அவற்­றில் ஒரு தனிப்­ப­டை­யி­னர் ஷீத்­த­லின் மனைவி ஜெய­மாலா (படம்) வசிக்­கும் மகா­ராஷ்­டிர மாநி­லம் புனே நோக்­கிச் சென்­றது. போலி­சா­ரின் தீவிர விசா­ர­ணை­யில் சில தக­வல்­கள் கிடைத்­துள்­ளன.

இச்­சம்­ப­வம் தொடர்­பாக செய்­தி­யா­ளர்­க­ளுக்கு பேட்­டி­ய­ளித்த சென்னை மாந­கர காவல் ஆணை­யர் மகேஷ்­கு­மார் அகர்­வால், "மூன்று பேர் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட வழக்­கில் மூன்று பேரை மகா­ராஷ்­டி­ரா­வின் சோலாப்­பூ­ரில் கைது செய்­தோம். காரில் துரத்திச் சென்று முக்­கிய குற்­ற­வாளிகள் கைலாஷ், ரவீந்­தி­ர­நாத், விஜய் உத்­தம்­க­மல் ஆகி­யோரை கைது செய்­தோம். குடும்­பத் தக­ராறு கார­ண­மாக கொலை செய்­யப்­பட்­டி­ருக்­க­லாம் என சந்­தே­கிக்­கி­றோம்.

"சென்னை போலிஸ் வரு­வதை அறிந்து அவர்கள் புனே­விலிருந்து சோலாப்­பூர் தப்­பி­னர். சோலாப்­பூ­ரில் இருந்து புனே­வுக்கு வாக­னத்­தில் தப்­பிச் செல்­லும்போது குற்­ற­வா­ளி­களை போலிஸ் படை மடக்­கிப் பிடித்­த­து. இல்­லற வாழ்க்­கை­யில் ஷீத்­தல்-ஜெய­மாலா இடையே பிரச்­சினை இருந்­தது தெரியவந்­துள்­ளது. மூன்று பேர் கொலை வழக்­கின் விசா­ர­ணைக்­காக ஆந்­திரா, கர்­நா­டகா, மகா­ராஷ்­டிரா போலிசார் உத­வி­னர். கொலையில் ஜெய­மாலாவும் அவரது உற­வி­னர்­களும் ஈடு­பட்­டுள்­ள­னர். ஷீத்­தல் குடும்­பத்­தி­னரை திட்­ட­மிட்டு ஐந்து முறை துப்­பாக்­கி­யால் சுட்­டுக்­கொன்­றுள்­ள­னர். கொலைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட துப்­பாக்­கியை போலிசார் பறி­மு­தல் செய்­துள்­ள­னர்," என்றார்.