கொரோனாவைக் கொளுத்தி கொண்டாடிய மாணவியர்

கொரோனாவைக் கொளுத்தி கொண்டாடிய மாணவியர்

1 mins read
3c563cf6-6656-4634-9354-720b4cfa3376
-

சரித்திரத்தில் இல்லாத வகை யில் இவ்வாண்டு தீபாவளி கொண்டாட்டம் கொரோனா கிருமிப் பிடிக்கு இடையில் நடைபெற்றது. கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் என்று கூறி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை போடப்பட்டது. இருப்பினும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் குறிப்பிட்ட நேரங்களில் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர். தெலுங்கானாவின் ஹைதரா பாத் நகரில் அரசு கல்லூரி விடுதியைச் சேர்ந்த மாணவியர் சற்று வித்தியாசமாகக் கொண்டாடினர். கொரோனா உருவபொம்மையை தீப ஒளி விளக்குகளால் கொளுத்தினர். கொரோனா கிருமி உருவ பொம்மையை நரகாசுரனாகக் கருதி தீமையைக் கொளுத்திய தாக அவர்கள் கூறினர்.