ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சிட்டபுல்லாம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மற்றும் அருக்காணி தம்பதியினர். இவர்களின் மகள் மேனகா தீபாவளியைக் கொண்டாட கணவரோடு தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது ஊர் எல்லையில் மேனகா மீது பட்டாசு கொளுத்திப் போட்டு இளைஞர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அங்கு வந்த ராமசாமி மற்றும் அருக்காணி இருவரும் அவர்களிடம் சண்டை போட்டனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர். ஆனால் தீபாவளியன்று காலை அரிவாள் வெட்டு காயங்களுடன் ராமசாமியும் அருக்காணியும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் மாண்டு கிடந்தனர். இந்தக் கொலைகள் தொடர்பாக 7 பேரைப் பிடித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில் பட்டாசு வெடித்ததில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. கள்ளக்குறிச்சி அருகே கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ மகன் கிருஷ்ணசாமி (34) இளங்கோ அரிசி கடை வைத்துள்ளார்.
இவரது ஒன்றரை வயது மகன் தர்ஷித். பக்கத்தில் வெடித்த பட்டாசு கடை மீது விழுந்ததால் கடையில் ஏற்கெனவே இருந்த பட்டாசுகளோடு சேர்ந்து வெடித்து தீப்பிடித்தது. இதில் குழந்தை தர்ஷன் உயிரிழந்தது.

