'புலி'யைப் பார்த்து பயத்தில் தெறித்து ஓடும் குரங்குகள்

'புலி'யைப் பார்த்து பயத்தில் தெறித்து ஓடும் குரங்குகள்

1 mins read
f5e8d8ed-b92a-4179-b1b4-93edeae83247
வீட்டு வாசலில் புலி பொம்மை உள்ளது. இதேபோல் கடை களின் வாசல்களிலும் வைத்து உள்ளனர். படம்: ஊடகம் -

பொள்­ளாச்சி அருகே வசிக்­கும் மக்­கள் குரங்­கு­கள் படுத்­தும் தொல்லை தாங்­க­மு­டி­யா­மல் பெரும் சிர­மப்­பட்டு வரு­கின்­ற­னர். இவர்­கள் தங்­க­ளின் கடை­கள், வீடு­க­ளுக்­குள் புகுந்து குறும்பு செய்­யும் குரங்­கு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த ஒரு புது யுக்­தி­யை­யும் இப்­போது கையாண்டு வரு­கின்­ற­னர்.

கோவை மாவட்­டம், பொள்­ளாச்­சியை அடுத்த நவ­மலை வனக்­கி­ராம மக்­கள், குரங்­கு­க­ளைத் தங்­க­ளது குடி­யி­ருப்­புப் பகு­தி­க­ளுக்­குள் வர­வி­டா­மல் தடுக்க தங்­க­ளது வீடு, கடை­க­ளின் வாச­லில் புலி பொம்­மையை வைத்து குரங்­கு­க­ளைக் கட்­டுப்­படுத்தி வரு­கின்­ற­னர்.

இந்­தப் புலி பொம்­மை­யைப் பார்க்­கும் குரங்­கு­கள் அது உண்மை புலி என்று நினைத்து பயத்­தில் தெறித்து ஓடு­வ­தால் அப்­ப­குதி மக்­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­தா­கக் கூறி­யுள்­ள­னர்.

நவ­மலை பகு­தி­யில் மலை அடி­வா­ரத்­தில் வசிக்­கும் கிராம மக்­கள் தங்­க­ளது வீடு­கள், கடை­கள் ஆகி­ய­வற்­றில் புகுந்து குரங்­கு­கள் அட்­ட­கா­சம் செய்­வ­தாக புகார்­கள் கூறி­னர். இந்­தப் பிரச்­சி­னைக்கு வனத்­துறை, காவல்­துறை அதிகா ரிக­ளால் கூட ஒரு நிரந்­தரத் தீர்வு கிடைக்­கா­மல் அவ­திப்­பட்டு வந்த மக்­கள் இப்­போது இந்த புலி பொம்­மை­க­ளால் நிம்­மதி அடைந்­துள்­ள­னர்.