தமிழ்நாட்டில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணியே தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் அறிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு தமிழகத்தில், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடக்கி வைத்தும், புதிதாகக் கட்டப்பட்ட நீர்த்தேக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
விழாவில் பேசிய எடப்பாடி கே. பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வமும் நாடாளுமன்றத் தேர்தலில் அமைத்த கூட்டணியே, தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என்றனர்.
வேல் யாத்திரை போன்ற விவகாரங்களில் அதிமுக, பாஜக இடையே முரண்பாடு இருந்து வந்த நிலையில், பேரவைத் தேர்தலில் கூட்டணி நிலைமை குறித்த கேள்விகள் இருந்து வந்தன. இந்த நிலையில், அதிமுக தலைவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

